இந்தியா

ஐஏஎஸ் சொத்துகள் விவரம்: மத்திய அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் ஆண்டுதோறும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அசையா சொத்து விவர அறிக்கை (ஐபிஆர்) சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக கடந்த 2017 முதல் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 31-க்கு பிறகு ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியாது என்பதால் அதற்குள் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும், தவறினால் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பதவி உயர்வு மறுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT