அமைச்சர் ரமேஷ்

 

படம்: ர. செல்வமுத்துகுமார்

இந்தியா

தமிழகத்தின் பெரிய கோயில்களில் தரிசனத்தை முறைப்படுத்த தனியார் மூலம் ஆய்வு: அமைச்சர் ரமேஷ் தகவல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: பெரிய கோயில்​களில் தரிசன வரிசையை முறைப்​படுத்த தனியார் நிறு​வனங்​கள் மூலம் ஆய்வு செய்​யப்​படும் என இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷ் தெரி​வித்​தார்.

திருச்​செந்​தூரில் கந்த சஷ்டி விழா ஏற்​பாடுகள் குறித்து ஆய்வு மேற்​கொண்ட பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: திருச்​செந்​தூர் முருகன் கோயி​லில் சாதா​ரண நாட்​களி​லேயே பக்​தர்​கள் வருகை அதி​க​மாக உள்​ளது. பண்​டிகை காலங்​களில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் வரு​கின்​றனர்.

கோயி​லில் தினமும் 9 கால பூஜைகள் நடக்​கின்​றன. ஒவ்​வொரு பூஜைக்​கும் 15 முதல் 20 நிமிடங்​கள் திரையிடப்​படு​கிறது. இத​னால், பக்​தர்​கள் நீண்ட நேரம் காத்​திருக்​கும் நிலை ஏற்​படு​கிறது. கந்த சஷ்டி விழா நாட்​களில் ரூ.100 கட்​ட​ணம் வாங்​கக் கூடாது என கூறியுள்​ளோம். இதன்​மூலம் தரிசன வரிசைகளை வேக​மாக அனுப்பி வரு​கிறோம்.

தமிழகம் முழு​வதும் உள்ள பெரிய கோயில்​களில் தரிசன வரிசைகளை முறைப்​படுத்​தவும், விரைவுபடுத்​தவும் தனியார் நிறு​வனங்​கள் மூலம் ஆய்வு நடத்த பேச்சு​வார்த்தை நடத்தி வரு​கிறோம். இதில், பொது தரிசனம், கட்​டண தரிசனம், மாற்​றுத்​திறனாளி​கள், குழந்​தைகள், முதி​யோர்​கள், கர்ப்​பி​ணிகள் என ஒவ்​வொரு சாராரை​யும் எந்​தெந்த வரிசைகளில், எவ்​வளவு நேரத்​தில் அனுப்​பலாம் என்​பது குறித்து ஆய்வு செய்​யப்​படும்.

இதற்​கான ஆய்​வறிக்கை கிடைத்​ததும் முறை​யான வரிசை முறை அமல்​படுத்​தப்​படும். அப்​போது, பொது தரிசனம் வழி​யில் பக்​தர்​கள் நீண்ட நேரம் காத்​திருப்​பது தவிர்க்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT