புதுடெல்லி: அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சாதனை படைத்துள்ளது.
‘விக்ரம்-1’ ராக்கெட் பயண வெற்றியைத் தொடர்ந்து, ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பவன்குமார் சந்தனா, நாகா பரத் தாகா ஆகியோரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பிரதமர், “இந்தியாவை நீங்கள் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நம் விண்வெளி கனவுகள் குறித்து பலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால், விண்வெளியில் இந்தியாவின் லட்சியங்களை விதைத்து, இளைஞர்களின் கனவுகளுக்கு வேரூன்றி இருக்கிறீர்கள்.
இந்திய இளைஞர்களால் எல்லாம் செய்ய முடியும் என நிரூபித்துள்ளீர்கள். இந்திய இளைஞர்கள் மீது நான் வைத்த நம்பிக்கையை நிஜமாக்கி விட்டீர்கள். நம்பிக்கை வைத்தால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்பதை இக்குழு நிரூபித்துள்ளது” என்று வாழ்த்தினார்.