இந்தியா

ஸ்லோவேக்கியா பள்ளி மாணவர்கள் யோகா செய்வதை பார்வையிட்ட பிரதமர்

செய்திப்பிரிவு

பிராடிஸ்லாவா: ஸ்லோவேக்கியா​வில் நேற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்​திர மோடி, சர்​வ​தேச யோகா தினத்தை முன்​னிட்டு அங்​குள்ள பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்வதை பார்​வை​யிட்​டார்.

பிரதமர் நரேந்​திர மோடி, பிரான்ஸ் மற்​றும் ஸ்லோவேக்​கி​யா​வில் 6 நாள் பயண​மாக கடந்த சனிக்​கிழமை டெல்​லி​யில் இருந்து புறப்பட்​டுச் சென்​றார். இப்​பயணத்​தில் நேற்று முன்​தினம் ஸ்லோவேக்​கியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்​நாட்டு பாரம்பரிய முறைப்​படி வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் ஸ்லோவேக்​கியா தலைநகர் பிராடிஸ்​லா​வா​வில் சர்​வ​தேச யோகா தினத்தை முன்​னிட்டு அங்​குள்ள பள்ளி மாணவர்​கள் யோகா செயல்​விளக்​கம் நிகழ்த்​தி​யதை பிரதமர் மோடி​யும் அந்​நாட்டு அதிபர் பீட்​டர் பெல்​லெக்​ரினி​யும் பார்வையிட்​டனர்.

இது தொடர்​பாக ‘எக்​ஸ்' தளத்​தில் பிரதமர் மோடி வெளி​யிட்ட பதிவில், ‘‘அதிபர் பெல்​லெக்​ரினி​யும் நானும் ஸ்லோவேக்​கியா பள்ளி மாணவர்​களின் யோகா செயல்​விளக்​கத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்​தோம்.

சர்​வ​தேச யோகா தினத்தை உலகமே எதிர்​நோக்​கிக் காத்​திருக்​கும் வேளை​யில், இளைஞர்​கள் யோகாவை ஏற்​றுக்​கொள்​வதை பார்ப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது. நல்​வாழ்வை நோக்​கிய கூட்​டுப் பயணத்​தில், யோகா தொடர்ந்து மக்​களை ஒன்​றிணைப்​பதை காண்​ப​தில் மகிழ்ச்​சி’’ என்று பதிவிட்டுள்​ளார்.

அதிபர் மாளி​கை​யில் வாராணசி குறித்து நடத்​தப்​பட்ட கண்காட்சியை பிரதமர் மோடி பார்​வை​யிட்​டார். இக்​கண்காட்சியில், சமீபத்​தில் இந்​தி​யா​வின் பழமை​யான நகர​மான வாராணசிக்கு சென்று வந்த ஸ்லோவேக்​கியா கலைஞர்​களின் படைப்​பு​களும் இடம்​பெற்​றிருந்​தன.

மக்​களுக்​கும் நாடு​களுக்​கும் இடையி​லான உறவு​களை வலுப்​படுத்​து​வ​தில் கலை​யும் கலாச்​சா​ர​மும் தனித்​துவ ஆற்​றலை கொண்​டிருப்​ப​தாக கூறிய பிரதமர் மோடி, இக்​கண்​காட்​சி​யில் தங்கள் படைப்​பு​களை காட்​சிப்​படுத்​திய அனை​வருக்​கும் பாராட்டு தெரி​வித்​தார்.

பிரதமர் மோடி இப்​பயணத்​தில் உற்​பத்​தி, போக்​கு​வரத்​து, புதிய கண்​டு​பிடிப்​பு, முதலீடு, எரிசக்​தி, உயிரி எரிபொருள், டிஜிட்​டல் தொழில்​நுட்​பம் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் இரு நாடு​கள் இடையி​லான ஒத்​துழைப்பு குறித்து அதிபர் பெல்​லெக்​ரினி​யுடன் கலந்​துரை​யாடி​னார். இரு நாட்டு மக்​களுக்கு இடையி​லான தொடர்​பு​களை மேம்​படுத்​தும் வழிகள் குறித்​தும் இரு தலைவர்களும் ஆராய்ந்​தனர்.

இப்​பயணத்​தின் மூலம் இந்​தி​யா-ஸ்​லோ​வாக்​கியா உறவு​களில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. பிரதமர் நரேந்​திர மோடி​யும், ஸ்லோவேக்​கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ​வும் பன்​முகத்​தன்மை மற்​றும் சர்​வ​தேச அமைப்​பு​களின் சீர்​திருத்​தங்​களுக்​காக தங்​கள் உறு​திப்​பாட்டை வெளிப்​படுத்​தினர்.

SCROLL FOR NEXT