இந்தியா

பிரதமர் மோடி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை

மோகன் கணபதி

புதுடெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் மக்களவையில் நேற்று தோற்கடிக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார்.

மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை நிறைவேற்றும் நோக்கில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டு அதில், அரசி​யல் சாசன திருத்​த (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அரசியல் சாசன திருத்த மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில் இந்த மசோதா மக்களவையில் நேற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

மொத்​தம் 528 எம்​.பி.க்​கள் வாக்​களித்​தனர். மசோதா நிறைவேற மக்​களவை​யில் 352 எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை எனும் நிலையில், 298 பேர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர். 230 பேர் மசோதாவுக்கு எதிராக வாக்​களித்​தனர். இதனால், மகளிர் இடஒதுக்​கீடு மசோதா தோல்வி அடைந்​தது.

அரசியல் சாசன திருத்த மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து மற்ற 2 மசோ​தாக்​கள்​ திரும்பப் பெறப்பட்டன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT