பிரசாந்த் கிஷோர்
பாட்னா: பிஹார் மாநிலம் பங்கிப்பூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஜன்சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல அரசியல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பாஜக சார்பில் 32 வயதான இளம் தலைவர் நீரஜ் குமார் சின்ஹா களம் இறக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பிரசாந்த் கிஷோர் தாக்கல் செய்துள்ள சொத்து விவர பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது: ”பிரசாந்த் கிஷோருக்கு ரூ.22.19 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.73.87 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.96.06 கோடியாகும்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவப் பேராசிரியையும் கிஷோரின் மனைவியுமான ஜானவி தாஸிற்கு ரூ.89.51 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.12.42 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.101.93 கோடியாகும். பிரசாந்த் கிஷோருக்கு வங்கியில் ரூ.5.77 கோடி அளவிற்கு கடன் பொறுப்புகள் (கடன்) உள்ளது. இவ்வாறு வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.