பிரசாந்த் கிஷோர்

 
இந்தியா

நிதிஷ் கட்சியை விழுங்கும் பாஜக: பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சியை பாஜக படிப்படியாக விழுங்கி அழித்து வருகிறது என ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியை பாஜக அழித்து வருகிறது. இதற்குக் கருத்துத் தெரிவிக்க சுர்ஜேவாலா தேவையில்லை. பிஹார் அரசியலைக் கொஞ்சம் புரிந்தவர்களுக்கும், ஜேடியூ படிப்படியாக அழிந்து வருவதும், பெரிய கட்சியான பாஜக அதையும் அதன் தலைமையையும் மெதுவாக விழுங்கி வருவதும் தெரியும்.

பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கீழ் திருட்டும் ஊழலும் மோசமடைந்துள்ளது. முன்பு ஊழல்கள் நடந்தன, மக்கள் அவற்றைப் பற்றிப் பேசினார்கள்.

இப்போது நல்லாட்சி என்ற பெயரில் ஊழலும் கொள்ளையும் நடக்கின்றன. ஊழலை மட்டும் பார்த்தால், மக்கள் பேசும் கால்நடைத் தீவன ஊழலைவிட இப்போது அதிகப் பணம் திருடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT