இந்தியா

சத்​தீஸ்​கரில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு: 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

செய்திப்பிரிவு

சக்தி: சத்​தீஸ்​கர் மாநிலம் சக்தி மாவட்​டத்​தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்​த​மான மின் உற்​பத்தி நிலை​யம் செயல்​பட்டு வரு​கிறது. இங்​கு, நேற்று மதி​யம் சுமார் 2 மணி​யள​வில் தொழிலாளர்​கள் தங்​களது வழக்​க​மான பணி​யில் ஈடுபட்டிருந்தனர்.

அப்​போது அங்​குள்ள பெரிய பாய்​லர் ஒன்று எதிர்​பா​ராத​ விதமாகப் பயங்கர சத்​தத்​துடன் வெடித்​துச் சிதறியது. இந்த விபத்தைத் தொடர்ந்து ஆலை வளாகம் முழு​வதும் அடர்ந்த புகை மூட்​டம் சூழ்ந்​த​தால் தொழிலா​ளர்​கள் உயிருக்​குப் பயந்து அலறியடித்​துக் கொண்டு ஓடினர்.

          

முதற்​கட்ட தகவல்​களின்​படி, இந்த விபத்​தில் 10 தொழிலா​ளர்​கள் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​த​தாக கூறப்​படு​கிறது. மேலும் 40-க்​கும் மேற்​பட்​டோர் பலத்த காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களில் 18 பேரின் நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக கூறப்​படு​வ​தால் உயிரிழந்தோர் எண்​ணிக்கை மேலும் உயரும் என அஞ்​சப்​படு​கிறது. விபத்து குறித்த தகவல் அறிந்​ததும் போலீ​ஸார், தீயணைப்​புப் படை​யினர் மற்​றும் மருத்​து​வக் குழு​வினர் சம்பவ இடத்​திற்கு விரைந்து வந்து மீட்​புப் பணி​களில் ஈடு​பட்​டனர்.

பாய்​லர் வெடித்​ததற்​கான துல்​லிய​மான காரணம் இன்​னும் கண்டறியப்​பட​வில்​லை. இருப்​பினும், தொழில்​நுட்​பக் கோளாறு காரண​மாக இந்த விபத்து நேரிட்​டிருக்​கலாம் எனச் சந்தேகிக்கப்படு​கிறது. இது குறித்து போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT