இந்தியா

ஜார்க்கண்ட்: கடிதங்களை விநியோகிக்காத தபால்காரர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்​தில் உள்ள பிதோரியா பகு​தி​யில் பலருக்கு முக்​கிய கடிதங்​கள் எது​வும் பல மாதங்​களாக வரவில்​லை.

இது குறித்து அவர்​கள் தபால் துறை​யிடம் புகார் தெரி​வித்​தனர். இதையடுத்து பிதோரியா பகு​தி​யில் கடிதங்​களை விநி​யோகிக்க வேண்​டிய தபால்​காரர் விகாஸ் குமாரிடம் தபால் நிலைய ஆய்வாளர் தீபக் குமார் விசா​ரணை நடத்​தி​னார்.

இதில் அவர் சுமார் ஓராண்​டாக எந்த கடிதத்​தை​யும் மக்​களுக்கு கொடுக்​க​வில்லை என தெரிந்​தது. அவரிடம் ஒப்​படைக்​கப்​பட்ட கடிதங்​கள் எங்கே என விசா​ரித்​த​போது, தபால் நிலைய வளாகத்தில் உபயோகம் அற்ற பொருட்​கள் இருக்​கும் அறை​களில் சாக்கு மூட்​டை​யில் கடிதங்​கள் குவித்து வைக்​கப்​பட்​டிருந்​தன. அதில் அப்​பகுதி மக்​களுக்கு வந்த ஆதார் அட்​டைகள், பான் அட்டைகள், வங்கி கணக்கு புத்​தங்​கங்​கள், வரு​மான வரித்​துறை நோட்​டீஸ்​கள் உட்பட பல முக்​கிய ஆவணங்​கள் இருந்​தன.

இதையடுத்து தபால்​கார் விகாஸ் குமார் சஸ்​பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும், விநி​யோகிக்​கப்​ப​டா​மல் இருந்த கடிதங்​கள் உரியவர்களிடம் சேர்க்க மாற்று நடவடிக்கை எடுக்​கப்​படும் என தபால்​ துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT