புதுடெல்லி: இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு களப் பணிகள் டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேகாலயா உட்பட பல மாநிலங்களில் தொடங்கியுள்ளன. இம்மாநிலங்களில் கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று, வீட்டு வசதிகள் மற்றும் சொத்துகள் தொடர்பான விவரங்களை செல்போன் செயலியில் பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். குடிமக்கள் தங்களைப் பற்றி தாங்களாவே இணைய வழியில் சமர்ப்பிக்கும் சுய கணக்கெடுப்பு முறையையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.