புதுடெல்லி: இந்திய கடலோர காவல் படைக்காக கோவா ஷிப்யார்ட் நிறுவனம் ‘சமுத்ர பிரதாப்’ என்ற மாசு கட்டுப்பாட்டு கப்பலை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியது.
இதுபோன்ற கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்திய கடலோர பகுதிகளில் ஏற்படும் மாசுவை அகற்றுவதற்காக பிரத்யேகமாக இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் ஆயில் பிங்கர் பிரின்டிங் இயந்திரம், ரசாயன கண்டுபிடிப்பு கருவிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் மாசுவை அகற்றும் இதர சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.