இந்தியா

கேரள மாணவர் இறப்பதற்கு முன் கடன் செயலியில் இருந்து 96 அழைப்பு - போலீஸார் தகவல்

செய்திப்பிரிவு

கண்ணூர்: கேரளா​வின் உழமலக்​கால் கிராமத்​தைச் சேர்ந்த நிதின் ராஜ், கண்​ணூரில் உள்ள தனி​யார் பல் மருத்து​வக் கல்​லூரி​யில் பிடிஎஸ் படித்து வந்​தார். இவர் கடந்த வாரம் கல்​லூரி கட்​டிடத்​தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்​டார்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறியதாவது: ஆன்​லைன் கடன் செயலி மூலம் நிதின் ராஜ் ரூ.13,500 கடன் பெற்​றுள்​ளார். இதற்கு அதிக வட்டி விதிக்​கப்​பட்​ட​தால், ஒரே மாதத்​தில் இந்த கடன் ரூ.19,000-ஆக உயர்ந்​துள்​ளது. இந்​நிலை​யில் கடந்த 6-ம் தேதி நிதின் ராஜ் ரூ.1,000 திருப்​பிச் செலுத்தியுள்ளார்.

          

ஆனால் கடன் கொடுத்​தவர்​கள் நிதின் இறப்​ப​தற்கு முதல் நாள் 96 முறை அழைத்து பணத்தை திருப்பி செலுத்​தும்​படி தொந்​தரவு செய்​துள்​ளனர். அதேநேரம் நிதின் படிக்​கும் கல்லூரி பேராசிரியர் ஒரு​வருக்​கும் 26 முறை போன் செய்து நிதினை கடனை திருப்​பிச் செலுத்​தும்​படி கூறியுள்ளனர்.

இதனால் அவர் இதுகுறித்து கல்​லூரி முதல்​வரிடம் புகார் அளித்​தார். இதைத் தொடர்ந்து நிதினை கல்​லூரி முதல்​வர் அழைத்து விசா​ரித்​துள்​ளார். அடுத்த 10-வது நிமிடத்​தில் நிதின் ராஜ் மாடியி​லிருந்து குதித்து இறந்​துள்​ளார். இவ்வாறு போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT