படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் நந்த் கிஷோர் சிங்
புதுடெல்லி: டெல்லி காவல் துறையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் நந்த் கிஷோர் சிங் நேற்று கூறியதாவது: “கடந்த புதன்கிழமை இரவு அனுமன் கோயில் அருகே காரை நிறுத்திவிட்டு ஜந்தர் மந்தர் காவல் பணிக்காக சீருடையில் சென்றேன்.
அப்போது நாடாளுமன்ற சாலை சந்திப்பில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த சுமார் 5,000 பேர் குழுமியிருந்தனர். அவர்களில் சுமார் 150 பேர் என்னை திடீரென தாக்கத் தொடங்கினர். லத்தி, கம்புகளால் அடித்தனர். அவர்களிடம் இருந்து மிகுந்த சிரமப்பட்டு தப்பினேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை டெல்லி காவல் துறை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது. தலைமைக் காவலர் பல்ராம் கூறும்போது, “கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர், என் முதுகில் கத்தியால் குத்தினார். அருகில் இருந்தவர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்” என்றார்.