கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அருகில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாடுவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று முன்தினம் குற்றம் சாட்டினர்.
முதல்வர் மம்தா பானர்ஜி தனது பவானிபூர் தொகுதிக்குட்பட்ட ஷகாவத் நினைவு பள்ளி வாக்கு எண்ணிக்கை மையத்தில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இங்கு நேரில் வந்து நீண்ட நேரம் அமர்ந்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தாவில் வாக்குகள் எண்ணப்படும் 7 பகுதிகளில் எந்த வகையான கூட்டங்களுக்கும் போலீஸார் நேற்று தடை விதித்தனர். சாஹித் குதிராம் போஸ் சாலை, ஜாதவ்பூர், டயமண்ட் ஹார்பர் சாலை, லார்ட் சின்ஹா ஹால், நரேஷ் மித்ரா சாரணி (பெல்டலா சாலை) உள்ளிட்ட 7 இடங்களில் இந்த தடை அமலில் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.