இந்தியா

தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தது போலீஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி போலீஸ் சிறப்​புப் பிரிவு துணை ஆணை​யர் பிர​வீன் குமார் திரி​பாதி கூறிய​தாவது:

மகா​ராஷ்டி​ரா, ஒடிசா மற்​றும் பிஹார் மாநிலங்​களைச் சேர்ந்த சிலர் ஆன்​லைன் மூல​மாக தீவிர​வாத குழுவை ஏற்​படுத்தி வரு​வ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்து இந்த கும்​பலை கண்​காணித்து வந்தோம். இதையடுத்து மகா​ராஷ்டி​ரா​வின் தானேவைச் சேர்ந்த மொசைப் அகமது என்ற சோனு, மும்​பையைச் சேர்ந்த முகமது ஹமாத், ஒடி​சா​வின் புவனேஸ்​வரைச் சேர்ந்த ஷேக் இம்​ரான், பிஹாரின் கதிஹாரைச் சேர்ந்த முகமது ஷோகைல் ஆகிய 4 பேரை கைது செய்தோம்.

இவர்கள் தீவிர​வாத அமைப்பு மற்​றும் முஸ்​லிம் நாடு உரு​வாக்​கும் கொள்​கைகளால் ஈர்க்​கப்​பட்​ட​வர்​கள். ஜாகிர் நாயக் போன்ற மத பேச்​சாளர்​களின் உரைகளால் ஈர்க்​கப்​பட்​ட​வர்​கள். இவர்​கள் இந்​தி​யா​வுக்கு எதி​ரான தீவிர​வாத நடவடிக்​கை​களில் ஈடுபட தயா​ராகி வந்​ததோடு, ஆன்​லைன் மூலம் பிறரை​யும் தீவிர​வாத இயக்​கத்​தில் சேர்க்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டனர்.

சமூக ஊடகங்​கள் மூலம் இந்த கும்​பல் தீவிர​வாத கொள்​கைகளைப் பரப்​புதல், பயிற்சி திட்​டம், நிதி திரட்​டு​தல் பற்றி விவாதங்​கள் நடத்​தி​யுள்​ளனர். ஒரு​வர் டெல்லி செங்​கோட்​டை,

இந்​தியா கேட் ஆகிய இடங்​களுக்கு கடந்த டிசம்​பரில் சென்று ஆய்வு நடத்​தி​யுள்​ளார். இவர்​களிடம் இருந்து வெடிபொருட்​கள், செல்​போன்​களை பறி​முதல் செய்​துள்ளோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT