பிரதம​ர் மோடி

 
இந்தியா

இந்தியாவின் பிம்பத்தை உலகளவில் மாற்றி அமைத்த பிரதமர் மோடியின் 12 ஆண்டு சாதனைகள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிரதம​ராக ஜவஹர்லால் நேரு 4,398 நாட்​கள் ஆட்சி செய்​தார். ஆனால், பிரதமர் மோடி நேற்​றுடன் 4,399 நாட்​கள் பதவி​யில் இருந்து அந்த சாதனையை முறியடித்​துள்​ளார். பிரதம​ராக மோடி தொடர்ந்து தனது 12 ஆண்டு கால ஆட்​சி​யில் பல முக்​கிய நடவடிக்​கைகள் மூலம் இந்​தி​யா​வின் பிம்​பத்தை உலகள​வில் மாற்றி அமைத்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் முறை​யாக மோடி பிரதமர் பதவியேற்றார். அதன் ​பின் உடனடி​யாக ‘ஜன் தன் யோஜ​னா’ திட்டம் மூலம் குறைந்​த​பட்ச வைப்​புத் ​தொகை ஏது​மின்றி லட்சக்கணக்​கான ஏழை மக்​களுக்கு வங்​கி​களில் சேமிப்​புக் கணக்கு சேவையை தொடங்க செய்​தார். தொடர்ந்து ‘மேக் இன் இந்​தி​யா’ மற்​றும் ‘ஆத்ம நிர்​பார் பாரத்’ போன்ற திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்​டன.

இத்​திட்​டங்​கள் உள்​நாட்டு உற்​பத்​தியை ஊக்​கு​வித்​தன. அத்​துடன், ஜிஎஸ்டி போன்ற முக்​கிய வரிச் சீர்​திருத்​தங்​கள் நாட்​டின் பொருளா​தா​ரத்​தையே மாற்​றியமைத்​தன. கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலை​மை​யின் கீழ் இந்​தி​யா​வில் மிக முக்கிய​மான கொள்கை மாற்​றங்​கள் கொண்டு வரப்​பட்​டன. இவற்றில் பல முடிவு​கள் நாட்​டின் பொருளா​தா​ரக் கட்​டமைப்​பு, பாது​காப்​பு, நலத்​திட்​டங்​கள் மக்​களவை நேரடி​யாகச் சென்றடையும் வழி​முறை​கள் ஆகிய​வற்றை மாற்றி அமைத்துள்ளன.

பாஜகவைப் பொறுத்த வரை, ராமர் கோயில் கட்​டு​வதைத் தீவிர கொள்​கை​யாக வைத்​திருந்​தது. இது ஜனவரி 2024-ல் அயோத்தியில் ராமருக்கு ‘பி​ராண பிர​திஷ்டை’ செய்​யப்​பட்​டதன் மூலம் நிறைவேறியது. முஸ்​லிம்​களின் தவறானப் புரிதலால் செயல்​பாட்​டில் இருந்த முத்​தலாக் நடை​முறைக்கு 2019-ல் தடைவிதித்து நாடாளு​மன்​றத்​தில் சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது.

இந்​திய அரசி​யலமைப்பு பிரிவு 370-ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்​கப்​பட்ட சிறப்பு அந்​தஸ்​தைக் கடந்த ஆகஸ்ட் 5, 2019-ல் மத்திய அரசு ரத்து செய்​தது. இந்​தி​யா​வின் டிஜிட்​டல் புரட்​சிக்கு யுபிஐ சேவை மிக முக்​கிய பங்கு வகிக்​கிறது. கடந்த 2016-ல் சிறிய கட்டண சேவை தளமாகத் தொடங்​கப்​பட்ட யுபிஐ, இன்று இந்தியாவின் சில்​லறை வர்த்​தகப் பொருளா​தா​ரத்​தின் முதுகெலும்​பாக உள்​ளது.

கடந்த 12 ஆண்டு கால பிரதமர் மோடி​யின் ஆட்​சி, இந்​தி​யா​வின் அரசி​யல் மற்​றும் பொருளா​தார தாக்​கத்தை உலகள​வில் ஏற்படுத்​தி​யுள்​ளது. பிரதமர் மோடி​யின் இந்த சகாப்​தம், நாட்​டின் சம கால வரலாற்​றில்​ ஒரு முக்​கிய மைல் ​கல்​லாக அமைந்​துள்​ளது.

SCROLL FOR NEXT