இந்தியா

மேற்கு வங்கத்தில் ‘ஆயுஷ்மான் பாரத்' - பிரதமர் வரவேற்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ஆயுஷ் மான் பாரத் திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது குறித்து பிரதமர் மோடி நேற்று தனது ‘எக்​ஸ்' பக்​கத்​தில் வெளியிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: தரமான, மலி​வான மருத்துவ வசதியை உறுதி செய்​யும் உலகின் மிகப்​பெரிய சுகாதாரத் திட்​ட​மான ஆயுஷ்​மான் பாரத் திட்​டத்​தின் பலன்​கள் இனி மேற்கு வங்க மாநில மக்​களுக்கு தடை​யின்றி கிடைக்​கும் என்​ப​தில் மிகுந்த மகிழ்ச்​சி.

அதே வேளை​யில், அங்​குள்ள இரட்டை இன்​ஜின் அரசு, மத்​திய அரசின் முக்​கி​யத் திட்​டங்​கள் தடை​யின்றி மக்​களைச் சென்​றடைவதை உறுதி செய்​யும். இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்.

SCROLL FOR NEXT