இந்தியா

வெளிநாட்டு பயணத்தைத் தவிர்க்க வேண்டும்; தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி அறிவுரை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘வெளி​நாட்டு பயணத்​தைத் தவிர்க்க வேண்​டும். தேவை​யின்றி தங்​கம் வாங்க வேண்​டாம்’’ என்​று நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார்.

நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில், இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீத​மாக உள்​ளது. அமெரிக்கா - ஈரான் போர், கச்சா எண்​ணெய் விலை உயர்வு உள்​ளிட்ட பல்​வேறு சவால்​களுக்கு மத்​தி​யில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இந்தச் சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட வீடியோ​வில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீத​மாக உள்​ளது. இந்​தி​யர்​களின் கடின உழைப்​பால் இந்த சாதனை சாத்​தி​ய​மாகி உள்​ளது. இதற்​காக நாட்டு மக்​கள் அனை​வருக்​கும் வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்த நேரத்​தில் சுதேசி கொள்​கைகளை இந்​தி​யர்​கள் அனை​வரும் கடை​பிடிக்க வேண்​டும். உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். தேவை​யில்​லாமல் வெளி​நாட்டு பயணங்​களை மேற்​கொள்​ளக் ​கூ​டாது. வெளி​நாடு​களில் திரு​மணங்​களை நடத்​தக் ​கூ​டாது. தேவை​யில்​லாமல் தங்​கத்தை வாங்​கக் ​கூ​டாது.

நாட்​டின் 100-வது சுதந்​திர தினத்தைக் கொண்​டாடும் ​போது வளர்ச்சி அடைந்த இந்​தியா என்ற லட்​சி​யத்தை எட்​டிப்பிடிக்க வேண்​டும். இதற்​காக அனைத்து தரப்பு மக்​களும் கடின​மாக உழைக்க வேண்​டும். நாட்​டின் 140 கோடி மக்​களும் இணைந்து செயல்​பட்​டால் நம்​மால் புதிய சிகரங்​களை எட்ட முடி​யும்.

வீட்​டில் இருந்து பணி​யாற்​றும் நடை​முறையை நிறு​வனங்​கள் பின்​பற்ற வேண்​டும். இதன்​ மூலம் பெட்​ரோல், டீசல் பயன்​பாட்டை குறைக்க முடி​யும். சொந்த வாக​னங்​களைப் பயன்​படுத்​தாமல் பேருந்​து, ரயில், மெட்ரோ ரயில் உள்​ளிட்ட பொது போக்​கு​வரத்தைப் பயன்​படுத்த வேண்​டும். பெட்​ரோல், டீசல் வாக​னங்​களுக்​குப் பதிலாக மின்​சார வாக​னங்​களுக்கு மாற வேண்​டும். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

கடந்த மே மாத​மும் பிரதமர் மோடி இது​போன்ற வேண்​டு​கோளை முன்​வைத்​தார். இந்​தி​யா​வின் தங்க தேவை​யில் 99% வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. அதன்​படி கடந்த 2025-26-ம் நிதி​யாண்​டில் வெளி​நாடு​களில் இருந்து ரூ.6.4 லட்​சம் கோடிக்கு தங்​கம் இறக்​குமதி செய்​யப்​பட்​டது. இதற்கு அமெரிக்க டாலரில் பணம் செலுத்த வேண்​டி உள்​ளது. கச்சா எண்​ணெய் இறக்​கும​திக்​கும் டாலரில் பணம் செலுத்த வேண்​டிய கட்​டா​யம் உள்​ளது.

வெளிநாடுகளிடம் தங்​கம், கச்சா எண்​ணெய் வாங்​கி​னால் நாட்​டின் அந்​நிய செலா​வணி கையிருப்பு கணிச​மாகக் குறை​யும். இது நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சி​யைப் பா​திக்​கும். இதன் காரண​மாகவே தேவை​யின்றி தங்​கம் வாங்க வேண்​டாம், பொது போக்​கு​வரத்தைப் பயன்​படுத்த பிரதமர்​ மோடி அறி​வுறுத்​தி உள்​ளார்​.

SCROLL FOR NEXT