இந்தியா

பிரதமர் மோடி நாளை மறுநாள் மலேசியா பயணம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக மலேசியாவுக்கு நாளை மறுநாள் செல்கிறார். அப்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து அவர், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமராக பதவியேற்றபின் மோடி மலேசியா செல்வது இது 3-வது முறை. 2 நாள் பயணத்தின் போது மலேசியாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார். பிரதமர் மலேசியா செல்லும் நேரத்தில், அங்கு இந்தியா-மலேசியா சிஇஓ அமைப்பின் 10-வது கூட்டமும் நடைபெறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT