பிரதமர் வருகையையொட்டி பாது​காப்பு ஏற்​பாடு​கள் குறித்து மாநில உள்​துறை அமைச்​சர் அனிதா, அமைச்சர் கொண்​டபல்லி ஸ்ரீநி​வாஸ் நேற்று நேரில் சென்று பார்​வை​யிட்​டனர்

 
இந்தியா

ஆகஸ்ட் 1-ல் பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரா வருகிறார்

செய்திப்பிரிவு

விஜயநகரம்: ஆந்​திர மாநிலம், விஜய​நகரம் மாவட்​டம், போகாபுரத்​தில் அல்​லூரி சீதா​ராம ராஜு விமான நிலைய பணிகள் நிறைவடைந்​துள்​ளது. இந்த விமான நிலை​யத்தை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்​ளார்.

இதற்​கான பாது​காப்பு ஏற்​பாடு​கள், ஹெலிபேட் தளம் உள்ளிட்டவற்றை மாநில உள்​துறை அமைச்​சர் அனிதா மற்​றும் அமைச்​சர் கொண்​டபல்லி ஸ்ரீநி​வாஸ் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்​வை​யிட்​டனர்.

இவ்​விழா​வில் பிரதமருடன் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, துணை முதல்​வர் பவன் கல்​யாண், மத்​திய அமைச்​சர் ராம்​மோகன் நாயுடு உட்பட பலர் கலந்​து கொள்​ள உள்​ளனர்​.

SCROLL FOR NEXT