புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 வரை ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 5 நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி மே 15-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.
அங்கு அவர் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்துப் பேச உள்ளார். இதைத் தொடர்ந்து, நெதர்லாந்து (மே 15-17), ஸ்வீடன் (மே 17-18), நார்வே (மே 18-19), இத்தாலி (மே 19-20) ஆகிய நாடுகளுக்குச் செல்வார். நார்வேயில், மே 19-ம் தேதி நடைபெறும் இந்தியா-நோர்டிக் உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.