இந்தியா

வீர சாவர்க்கரின் 143-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழஞ்சலி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வீர சாவர்க்​கரின் 143-வது பிறந்​த​நாளை முன்​னிட்டு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அவருக்கு புகழஞ்​சலி செலுத்தினார். அவரது துணிச்​சலும் தேசபக்​தி​யும் எப்​போதும் மக்களுக்கு ஊக்​கமளிக்​கும் என்று அவர் கூறி​னார்.

இதுகுறித்து ‘எக்​ஸ்' தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி வெளியிட்டுள்ள பதி​வில், “வீர சாவர்க்​கரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்​கிறேன். அவரது துணிச்​சலும் தேசபக்​தி​யும் எப்​போதும் மக்​களுக்கு ஊக்​கமளிக்​கும். அவரது புத்தி கூர்மையும், சமூக சீர்​திருத்​தம் தொடர்​பான அவரது கருத்​துகளும் குறிப்​பிடத்​தக்​கவை” என்று கூறி​யுள்​ளார்.

சாவர்க்​கரை ஒரு சிறந்த புரட்​சி​யாளர் மற்​றும் தீவிர தேசி​ய​வாத சிந்​தனை​யாளர் என்று வர்​ணித்த பிரதமர், வீரம் மற்​றும் புத்​தி​கூர்மை நிறைந்த அவரது ஆளு​மை, நாட்​டின் ஒவ்​வொரு தலை​முறைக்​கும் தொடர்ந்து ஊக்​கமளிக்​கும் என்​றார். அரசியல்வாதியும், சிந்​தனை​யாள​ரும், இந்து மகாசபை​யின் முக்கிய தலை​வரு​மான சாவர்க்​கர், மே 28, 1883-ல் பிறந்​தார். பிப்ரவரி 26, 1966-ல் தனது 82-வது வயதில் கால​மா​னார்.

என்​டிஆர் பிறந்த நாள் ஆந்​திர முன்​னாள் முதல்​வரும் தெலுங்கு தேசம் கட்​சி​யின் நிறு​வனரு​மான என்​.டி.​ரா​மா​ரா​வின் 103-வது பிறந்த நாளை​யொட்டி அவருக்கு பிரதமர் நரேந்​திர மோடி புகழஞ்சலி செலுத்​தி​னார். இதுகுறித்து அவர் தனது ‘எக்​ஸ்' பதிவில், “மாபெரும் தலை​வர் என்​டிஆருக்கு அவரது பிறந்த நாளை​யொட்டி எனது அஞ்​சலிகள். ஏழை எளியோர் மற்​றும் விளிம்​புநிலை மக்​களின் கண்​ணி​யத்தை உறுதி செய்த, பொதுநலன் மற்​றும் நல்​லாட்​சி​யின் மீதான அவரது அர்ப்​பணிப்​பணிப்​புக்​காக அவர் அன்​புடன் நினை​வு​கூரப்​படு​கிறார்.

திரைத்​துறைக்கு என்​டிஆர் ஆற்​றிய பங்​களிப்​பு​கள், தலை​முறை தலை​முறை​யாக மக்​களைத் தொடர்ந்து கவர்ந்து வரு​கின்​றன. அவரது வாழ்​வும் கொள்​கைகளும் இன்​றும் அளவற்ற உத்​வேகத்தின் ஆதா​ர​மாகத் திகழ்​கின்​றன. எனது நண்​பர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் ஆந்​தி​ரா​வில் அமைந்​துள்ள என்​டிஏ அரசு, மக்​கள் நலனுக்​காக என்​டிஆர் கொண்​டிருந்த உயரிய லட்சியங்களை முன்​னெடுத்​துச் செல்வதில் உறுதியுடன் உள்ளது” என்று கூறியுள்ளார்.

நடிகரும் அரசியல்வாதியுமான என்.டி. ராமராவ், மக்கள் மத்தியில் என்டிஆர் என்றே பரவலாக அறியப்படுகிறார். இவர் மே 28, 1923-ல் பிறந்தார். சுமார் 300 திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்துக்கு உயர்ந்தார். 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை நிறுவினார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். ஜனவரி 18, 1996-ல் தனது 72-வது வயதில் காலமானார்.

SCROLL FOR NEXT