பிரதமர் மோடி

 
இந்தியா

தேச பிரிவினை கொடுமை நினைவு தினம் தியாகிகளுக்கு: பிரதமர் மோடி புகழாரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யப் பிரி​வினை​யின்​போது நிகழ்ந்த வன்​முறை​கள், உயி​ரிழப்​பு​கள் மற்​றும் லட்​சக்​கணக்​கான மக்​களின் இடப்​பெ​யர்வு துயரங்​களை நினை​வு​கூரும் வகை​யில், ஆண்​டு​தோறும் ஆகஸ்ட் 14-ம் தேதி பிரி​வினை கொடுமை நினைவு தின​மாக கடைப்​பிடிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், இதுகுறித்து பிரத​மர் மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் தெரி​வித்​துள்​ள​தாவது: பிரி​வினை கொடூர நினைவு தின​மான இன்​று, நாட்​டின் பிரி​வினை​யால் பாதிக்​கப்​பட்ட எண்​ணற்ற மக்​களின் மன உறு​தி​யை​யும் தியாகத்​தை​யும் நினை​வு​கூர்​கிறோம்.

தாயகப் பிரி​வினை​யின்​போது சொல்​லொணாத் துயரங்​களைச் சந்​தித்​த​போ​தி​லும், மீண்​டெழுந்து நின்று மீண்​டும் வாழ்க்கையைக் கட்​டமைத்த மனிதர்​களின் தியாகம் மற்​றும் தீரத்தை இந்​தத் தேசம் என்​றும் மறவாது.

வரலாற்​றின் அந்​தப் பேர​வலத்​தில் தங்​களது உயிர்​களை நீத்​த​வர்களுக்​கும், வாழ்​வா​தா​ரங்​களை இழந்து புலம் பெயர்ந்​த​வர்களுக்​கும் எனது நெஞ்​சார்ந்த அஞ்​சலியைச் செலுத்​துகிறேன். இவ்​வாறு பிரதமர்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT