இந்தியா

மோடியின் அந்த உத்தரவு... ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து அஜித் தோவல் வெளியிட்ட முதல் தகவல்

‘தீவிரவாதிகள் எங்கு ஒளிந்திருந்தாலும் வேட்டையாடுங்கள்’

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாதத் தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக மேற்​கொள்​ளப்​பட்ட 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்​கை​யின் பின்​னணி​யில் உள்ள வியூ​கங்​கள் குறித்து தேசியப் பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் முதன்​முறை​யாக மனம் திறந்து விரி​வாகப் பேசி​யுள்​ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் 26 அப்​பாவி மக்​கள் கொல்லப்பட்ட கொடூர சம்​பவத்​தைத் தொடர்ந்​து, பிரதமர் நரேந்திர மோடி தனது வெளி​நாட்​டுப் பயணத்​தைப் பாதி​யிலேயே ரத்து செய்​து​விட்டு உடனடி​யாக இந்​தியா திரும்​பியதை நினை​வு​கூர்ந்த தோவல் அதுகுறித்து விரி​வாக பேசி​ய​தாவது: விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி தலை​மை​யில் அவசர ஆலோசனைக் கூட்​டம் நடை​பெற்​றது. முதலில் அனைத்​துக் கள நில​வரங்​களை​யும் கேட்​டறிந்த பிரதமர், அடுத்து என்​னிடம் கேட்ட முதல் கேள்வி ‘இதைச் செய்​தது யார்?’ என்​பது​தான்.

அதனைத் தொடர்ந்​து, ‘தீ​விர​வா​தி​கள் நிலத்​தில் இருந்​தா​லும், ஆகா​யத்​தில் இருந்​தா​லும், பாதாளத்​தில் ஒளிந்​திருந்​தா​லும் அவர்களைத் துரத்​திச் சென்று வேட்​டை​யாடுங்​கள்; அவர்​களை ஒரு​போதும் மன்​னிக்​கக் கூடாது’ என்று பிரதமர் உறு​தி​யுடன் உத்​தர​விட்​டார். நமது உளவு அமைப்​பு​கள் ஆற்​றிய மிகச் சிறப்​பான பணி​யால், தாக்​குதலில் ஈடு​பட்ட தீவிர​வா​தி​களை குறுகிய காலத்தில் கண்​டறிந்​து, மிகத் துல்​லிய​மாக நடவடிக்கை எடுக்க முடிந்​தது.

நாட்​டின் இறை​யாண்​மை​யைப் பாது​காக்க இந்​தியா எந்த எல்லைக்​கும் செல்​லத் தயா​ராக இருந்​தது. நாட்​டின் பொறுமையை இந்​தி​யா​வின் பலவீன​மாகக் கரு​தி​விடக் கூடாது. பஹல்​காம் தாக்​குதலில் ஈடு​பட்ட தீவிர​வா​தி​கள், ‘போய் மோடியிடம் சொல்​லுங்​கள்​... என்ன செய்ய முடி​யுமோ செய்யட்டும்’ என்று பாதிக்​கப்​பட்​ட​வர்​களிடம் சவால் செய்​தனர்.

எனவே, தீவிர​வாதத்​துக்கு ஆதர​வளிப்​ப​தையோ அல்​லது அவர்களுக்கு எதி​ராக நடவடிக்கை எடுக்​காமல் இருப்​ப​தையோ இந்​தியா ஒரு​போதும் சகித்​துக் கொள்​ளாது என்​ப​தைப் பாகிஸ்தான் ராணுவத்​துக்கு உணர வைக்​கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது.

பஹல்​காம் தாக்​குதலுக்​குக் காரண​மான தீவிர​வாதக் கட்டமைப்புகளை அழிப்​பதே ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் முதன்மை இலக்​காக இருந்​தது. இந்​தி​யா​வின் வளர்ந்து வரும் தொழில்​நுட்ப மற்​றும் ராணுவப் பலத்​துக்​குச் சான்​றாக இந்த ‘சிந்தூர்’ நடவடிக்கை அமைந்​தது. இவ்​வாறு அஜித்​ தோவல்​ பேசினார்​.

SCROLL FOR NEXT