புதுடெல்லி: ‘சமுத்ர பிரதாப்’ கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, நமது சுயசார்பு பார்வையை வலுப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
இந்தியக் கடலோர காவல் படையின் ஐ.சி.ஜி.எஸ். சமுத்ர பிரதாப் என்ற கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 5-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது இந்தியாவின் முதல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மாசு கட்டுப்பாட்டு கப்பல் ஆகும்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியக் கடலோர காவல் படையின் ‘சமுத்ர பிரதாப்’ கப்பல் சேவையில் இணைக்கப்பட்டது பல காரணங்களுக்காகக் குறிப்பிடத்தக்கது. இது நமது சுய சார்பு பார்வையை வலுப்படுத்துவதுடன், நமது பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்து கிறது. மேலும், சுற்றுச்சூழலைப் பேணுவதில் நமது உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது” என கூறப்பட்டுள்ளது.