இந்தியா

அகமதாபாத்: பிரதமர் மோடி - ஜெர்மனி அதிபர் மெர்ஸ் இடையே பேச்சுவார்த்தை!

சர்வதேச பட்டம் விடும் விழாவில் பங்கேற்று அசத்தல்!

தமிழினி

அகமதாபாத்: இந்தியா வந்திருக்கும் ஜெர்​மனி அதிபர் பிரட்​ரிக் மெர்​ஸ், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அகமதாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் மோடி​யின் அழைப்பை ஏற்று ஜெர்​மனி அதிபர் பிரட்​ரிக் மெர்​ஸ், 2 நாள் பயண​மாக இன்று இந்​தியா வந்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

பிரட்​ரிக்​கின் முதல் இந்​திய பயணம் இது. குஜ​ராத்​தின் அகம​தா​பாத்​தில் பிரதமர் மோடி​யும் அதிபர் பிரட்​ரிக்​கும் இன்று சந்​தித்து ஆலோ​சனை நடத்தினர். அப்​போது இரு நாடு​களுக்கு இடை​யில் வர்த்​தகம், முதலீடு, சிக்​கலான தொழில்​நுட்​பப் பரி​மாற்​றம், பாது​காப்​புத் துறை போன்ற முக்​கிய அம்​சங்​கள் குறித்து தலை​வர்​கள் இரு​வரும் விரி​வாக ஆலோசனை நடத்​தியதாக சொல்லப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் உடனிருந்தனர். இந்தக் கூட்டம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் வளாகத்தில் நடைபெற்றது.

ஆசிரமத்திற்கு வந்த பிறகு, இரு தலைவர்களும் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு மலரஞ்சலி செலுத்தினர். மெர்ஸ் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.

பட்டம் விடும் விழா: மகர சங்கராந்தியை முன்னிட்டு சபரிமதி ஆற்றங்கரையில் மூன்று நாள்கள் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் விழா இன்று காலை தொடங்கியது. இந்தவிழாவை பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமர் பிரட்​ரிக் மெர்​ஸும் இணைந்து பட்டம்விட்டு தொடங்கி வைத்தனர்.

அக்கொடியில், இரு நாட்டு கொடிகள், தலைவர்களின் படங்கள் மற்றும் இந்து கடவுள்களின் கொடிகள் அச்சிடப்பட்டிருந்தன.

SCROLL FOR NEXT