இந்தியா

என்னையும் என் தாயாரையும் அவதூறாக பேசியவர்களை மன்னிக்கிறேன்: பிரதமர் மோடி வீடியோ பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் அண்​மை​யில் நடந்த மாணவர்​கள் போராட்​டத்​தின் போது பிரதமரை அவதூறாகப் பேசி​யதற்​காக போராட்​டக்​காரர்​கள் சிலர் மீது வழக்​கு​கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்​நிலை​யில் ஒரு வீடியோ பதி​வில் பிரதமர் மோடி கூறியிருப்​ப​தாவது:

ஜந்​தர் மந்​தரில் என்​னைப் பற்றி மட்​டுமல்ல, மறைந்த எனது தாயாரைப் பற்​றி​யும் அவதூறாகப் பேசி​னார்​கள். அது மிக​வும் மோச​மான செய​லாகும். இருப்​பினும் இளம் வயதில் தவறுகள் நடப்​பது இயல்​பு. அந்​தத் தவறுகளைத் திருத்​திக் கொள்ள நாம் வாய்ப்​பளிக்க வேண்​டும்.

அவர்​களை தண்​டிப்​ப​தோ, நீதி​மன்​றங்​களுக்கு அலைக்​கழிப்​பதோ அல்​லது அவர்​களது குடும்​பத்​தினரை துன்​புறுத்​து​வதோ நிலை​மையை மாற்​றி​வி​டாது. அவர்​கள் வழிதவறிய குழந்​தைகள். அவர்​களை சரி​யான பாதைக்கு அழைத்​துச் செல்​வது நமது கடமை. நான் அவர்​களை மன்​னிக்க விரும்​பு​கிறேன். சமூக​மும் எனது முடிவை ஏற்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இந்த இளைஞர்​கள் மீதான வழக்​கு​கள் திரும்​பப் பெறப்​படும் என்​ப​தற்​கான தெளி​வான சமிக்​ஞையை பிரதமர் அளித்​துள்​ளார். முன்​ன​தாக, குஜ​ராத் முதல்​வ​ராக இருந்​த​போது, தனக்கு மின்​னஞ்​சலில் மிரட்​டல் விடுத்த இளைஞரை மோடி மன்​னித்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதற்​கிடை​யில் மாணவர்​கள் போராட்​டத்​தில் பிரதமர் மோடியை அவதூறாக பேசி​ய​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்ட பெண் ஒரு​வர், தனது பேச்​சுக்கு மன்​னிப்பு கேட்​கும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

அந்த வீடியோ​வில், “போ​ராட்​டத்​தில் இருந்த சிலரின் தூண்​டு​தலால், பிரதமருக்கு எதி​ராக பல தவறான கருத்​துகளை நான் பேசி​விட்​டேன். எனக்கு 15 வயது​தான் ஆகிறது. (எனினும் எப்​ஐஆரில் இந்​தப் பெண்​ணுக்கு 25 வயது என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது). நான் செய்​தது மன்​னிக்க முடி​யாத செய​லாகும். நான் பல மோச​மான வார்த்​தைகளை பேசி​விட்​டேன். இதுவே எனது முதல் மற்​றும் கடைசித் தவறாக இருக்​கும். நாட்டு மக்​களிடம் நான் மன்​னிப்பு கேட்​டுக்​கொள்​கிறேன். நான் மிக​வும் வெட்​கப்​படு​கிறேன். என்​னையே என்​னால் பார்க்க முடிய​வில்​லை. தயவுசெய்து என்னை மன்​னித்​து​விடுங்​கள்​” என்​று அந்​தப்​ பெண்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT