இந்தியா

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை மம்தா அரசு அவமதித்தது வெட்கக்கேடானது: பிரதமர் மோடி கண்டனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்​கு​வங்​கத்​தின் கோசாய்​பூரில் நேற்று சந்​தாலி பழங்​குடி​யினரின் மாநாடு நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று பாக்​டோக்ரா விமான நிலை​யத்​தில் தரை​யிறங்​கி​னார். ஆனால் சிலிகுரி மேயர் கவுதம் தேவ் மட்​டுமே விமான நிலை​யத்​தில் குடியரசுத் தலை​வருக்கு வரவேற்பு அளித்​தார்.

இதன்​பிறகு பழங்​குடி​யினர் மாநாட்​டில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பேசி​ய​தாவது: அரசு மரபின்​படி என்னை வரவேற்க முதல்​வரோ, மாநில அமைச்​சரோ வந்​திருக்க வேண்​டும். அவர்​கள் வரவில்​லை. முதல்​வர் மம்தா என் மீது அதிருப்​தி​யில் இருக்​கிறா​ரா? எது​வாக இருந்​தா​லும் இந்த விவ​காரத்தை நான் பெரி​தாக எடுத்​துக் கொள்​ள​வில்​லை.

          

சிலிகுரி அரு​கே​யுள்ள பிதான் நகரில் சந்​தாலி பழங்​குடி​யினர் மாநாடு நடை​பெறு​வ​தாக இருந்​தது. ஆனால் மாநில அரசு திடீரென கோசாய்​பூருக்கு மாநாட்டை மாற்றி உள்​ளது. இந்த இடம் மிக​வும் சிறியது. இதில் பெருந்​திரளானோர் பங்​கேற்க முடி​யாது. முதல்​வர் மம்தா எனக்கு தங்கை போன்​றவர். மாநாடு இடத்தை மாற்​றியது ஏன் என்​பது குறித்து அவர் விளக்​கம் அளிக்க வேண்​டும். பழங்​குடி​யின மக்​களின் வளர்ச்​சிக்கு தேவை​யான நடவடிக்​கைகளை மேற்​கு​வங்க அரசு மேற்​கொள்​ள​வில்லை என்றே கருதுகிறேன். இவ்​வாறு முர்மு பேசி​னார்.

இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இது மிக​வும் வெட்​கக்​கே​டானது. இதற்கு முன்பு இது​போன்ற நிகழ்ந்தது இல்லை. குடியரசுத் தலை​வரே தனது வேதனையை பதிவு செய்துள்​ளார். மேற்​கு​வங்​கத்தை ஆளும் திரிண​மூல் அரசு வரம்​புகளை​ மீறி உள்​ளது.

குடியரசுத் தலை​வர் அவம​திக்​கப்​பட்​டதற்​கு, மேற்​கு​வங்க அரசு முழு பொறுப்​பு. குடியரசுத் தலை​வர் அலு​வல​கம், அரசி​யலுக்கு அப்​பாற்​பட்​டது. அந்த அலு​வல​கத்​தின் மாண்பை காப்​பாற்ற வேண்​டியது அனை​வரின் கடமை ஆகும். திரிண​மூல் காங்​கிரஸுக்​கு நல்ல புத்தி வர வேண்​டும் என விரும்​பு​கிறேன்​. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT