பிரதமர் நரேந்திர மோடி

 
இந்தியா

“மேற்கு வங்கத்தில் கொடுங்கோல் ஆட்சி அகற்றப்படும்” - பிரதமர் நரேந்திர மோடி கருத்து

செய்திப்பிரிவு

குவாஹாட்டி/கொல்கத்தா: மேற்​கு​ வங்​கத்​தில் கொடுங்​கோல் ஆட்சி அகற்​றப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

அசாமின் கோக்​ரஜர், குவாஹாட்டி நகரங்​களில் நேற்று நலத்​திட்ட விழாக்​கள் நடை​பெற்​றன. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். இரு விழாக்​களி​லும் ரூ.24,250 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

இதைத் தொடர்ந்து அசாமின் சில்​சார் நகரில் நேற்று நடந்த நலத்​திட்ட விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்று ரூ.23,550 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

          

நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு வடகிழக்கு மாநிலங்​களின் வளர்ச்​சி​யில் அப்​போதைய காங்​கிரஸ் அரசு அக்​கறை செலுத்​த​வில்​லை. மத்​தி​யில் பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு வடகிழக்​குக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்​டது.

செமி கண்​டக்​டர் உற்​பத்தி உட்பட பல்​வேறு தொழில்​கள் அசாமில் தொடங்​கப்​பட்டு உள்​ளன. ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறு​வனங்​கள், எய்ம்ஸ் மருத்​து​வ​மனை ஆகியவை அமைக்​கப்​பட்​டுள்​ளன. உலகின் பல்​வேறு நாடு​களில் போர்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதனால் உலகம் முழு​வதும் பாதிப்​பு​கள் ஏற்​பட்​டுள்​ளன. இந்த பாதிப்​பு​களை குறைக்க மத்​திய அரசு அதிதீ​விர நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. இந்த இக்​கட்​டான நேரத்​தில் காங்​கிரஸ் கட்சி பொறுப்​புடன் செயல்​பட​வில்​லை.

தற்​போது​கூட நாட்​டின் நலனுக்கு எதி​ராக அந்த கட்சி செயல்​படு​கிறது. மக்​களிடையே பொய்​கள், வதந்​தி​களை பரப்பி வரு​கிறது. இந்​தி​யா​வின் வளர்ச்​சியை விரும்​பாத சில அந்​நிய சக்​தி​களின் ஊதுகுழலாக காங்​கிரஸ் செயல்​படு​கிறது. அந்த கட்சி குறித்து பொது​மக்​கள் மிகுந்த எச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

இதைத் தொடர்ந்து மேற்​கு​வங்க தலைநகர் கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.18,680 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்​தார், விழா​வில் அவர் பேசி​ய​தாவது:

மேற்​கு​ வங்​கத்​தில் சாலைகள், உள்​கட்​டமைப்​பு​கள் தொடர்​பாக பல்​வேறு திட்​டங்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. அம்​ருத் பாரத் திட்​டத்​தின் கீழ் மேற்கு வங்​கத்​தின் 6 ரயில் நிலை​யங்​கள் புதுப்​பிக்​கப்​பட்டு வரு​கின்​றன. புதிய விரைவு ரயில் சேவை தொடங்​கப்​பட்டு உள்​ளது. கொல்​கத்​தா, ஹால்​டியா துறை​முகங்​களின் உள்​கட்​டமைப்​பு​கள் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இதன்​மூலம் ஒட்​டுமொத்த கிழக்கு இந்​தி​யா​வும் வளர்ச்சி அடை​யும்.

மேற்கு வங்​கத்​தில் தற்​போது கொடுங்​கோல் ஆட்சி (திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சி) நடை​பெற்று வரு​கிறது. வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இந்த கொடுங்​கோல் ஆட்சி அகற்​றப்​படும். மேற்கு வங்க மக்​கள் மாற்​றத்தை விரும்​பு​கின்​றனர். இன்​றைய பொதுக்​கூட்​டத்​தில் மக்​கள் பங்​கேற்​பதை தடுக்க மிகப்​பெரிய அளவில் வன்​முறை சம்​பவங்​கள் அரங்​கேற்​றப்​பட்​டன. ஆனால் அவற்றை தாண்டி பெருந்​திரளான மக்​கள் இங்கு கூடி​யுள்​ளனர். விரை​வில் காட்​டாட்​சிக்​கு முற்​றுப்​புள்​ளி வைக்​கப்​படும்​. இவ்​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

SCROLL FOR NEXT