கேரளாவின் திருவல்லா நகரில் நேற்று பாஜக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். படம்: பிடிஐ

 
இந்தியா

கேரளாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்: பிரதமர் மோடி உறுதி

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளா​வில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்சி அமைக்​கும் என்று பிரதமர் நரேந்​திர மோடி நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார்.

கேரள மாநிலம் திரு​வல்லா நகரில் பாஜக சார்​பில் நேற்று பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: மார்க்​சிஸ்ட் கூட்​ட​ணி, காங்​கிரஸ் கூட்​டணி ஆகியவை கேரளா​வில் அடுத்​தடுத்து ஆட்சி அமைத்து வரு​கின்​றன.

          

ஆனால், இரு கூட்​ட​ணி​களும் மாநிலத்​தின் வளர்ச்​சி​யில் கவனம் செலுத்​த​வில்​லை. பாஜக ஆளும் பிற மாநிலங்​களை ஒப்​பிடும் போது கேரளா மிக​வும் பின்​தங்​கிய நிலை​யில் இருக்​கிறது. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் இருந்து தங்​கம் திருடப்​பட்டு உள்​ளது. இதில் மார்க்​சிஸ்ட் மற்​றும் காங்​கிரஸ் கட்​சிகளின் தலை​வர்​களுக்​குத் தொடர்பு இருக்​கிறது. நாங்​கள் ஆட்சி அமைக்​கும் போது அவர்​கள் மீது மிகக் கடுமை​யான நடவடிக்கை எடுப்​போம்.

மேற்கு ஆசிய போர் விவ​காரத்​தில் காங்​கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்​மறை​யாக விமர்​சனம் செய்து வரு​கிறது. மேற்கு ஆசிய நாடு​களில் சுமார் ஒரு கோடி இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். குறிப்​பாக கேரளாவைச் சேர்ந்த லட்​சக்​கணக்​கான மக்​கள், மேற்கு ஆசிய நாடு​களில் பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​களின் பாது​காப்​பு, வாழ்​வா​தா​ரம் குறித்து காங்​கிரஸுக்கு துளி​யும் அக்​கறை இல்​லை. ஒட்​டுமொத்த மேற்கு ஆசிய நாடு​களும் இந்​தி​யாவை எதிரி​யாக கருதும் வகை​யில் அந்த கட்சி மோச​மான கருத்​துகளை கூறி வரு​கிறது.

மேற்கு ஆசி​யா​வில் உள்ள அனைத்து நாடு​களு​ட​னும் மத்​திய அரசு மிக நெருங்​கிய நட்​புறவை பேணி வரு​கிறது. இதன் காரண​மாக அந்த நாடு​கள், இந்​தி​யர்​களைத் தங்​களது குடும்ப உறுப்​பினர்​களாகக் கருதுகின்​றன. அவர்​களின் பாது​காப்​புக்கு மிகுந்த முக்​கி​யத்​து​வம் அளிக்​கின்​றன.

எனவே, மேற்கு ஆசி​யா​வில் வாழும் இந்​தி​யர்​களின் நலன்​களை கருத்​தில் கொண்டு காங்​கிரஸ் செயல்பட வேண்​டும் என்று கண்​டிப்​புடன் அறி​வுறுத்​துகிறேன்.

ஆளும் மார்க்​சிஸ்ட் கூட்​டணி அரசு, காங்​கிரஸ் கூட்​டணி மீது கேரள மக்​கள் மிகுந்த அதிருப்​தி​யில் உள்​ளனர். எனவே வரும் கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

கடந்த மார்ச் 29-ம் தேதி பாலக்​காடு, திருச்​சூர் பகு​தி​களில் பிரதமர் நரேந்​திர மோடி பிரச்​சா​ரம் செய்​தார். இதைத் தொடர்ந்து திரு​வல்லா மற்​றும் திரு​வனந்​த​புரத்​தில்​ அவர்​ நேற்று தீவிர பிரச்​சா​ரம்​ செய்​தார்​.

SCROLL FOR NEXT