டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘நாரி சக்தி வந்தன்’ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். உடன் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி உள்ளிட்டோர் உள்ளனர்.படம்: பிடிஐ

 
இந்தியா

மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த அனைத்துக் கட்சியினருக்கும் பிரதமர் மோடி அழைப்பு

21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான முடிவு என பெருமிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்​கீட்டு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காகப் பல தசாப்​தங்​களாக நில​வும் காத்​திருப்​புக்கு தற்​போது முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டிய சரி​யான தருணம் வந்​து​விட்​டது என்று பிரதமர் நரேந்​திர மோடி உறு​திபடத் தெரி​வித்​தார். நாட்​டின் உயரிய சட்​ட​மியற்​றும் அமைப்​பான நாடாளு​மன்​றம் ஒரு புதிய சரித்​திரத்​தைப் படைக்​கும் தரு​வா​யில் இருப்​ப​தாக​ கூறிய அவர், இச்​சட்​டத்தை நடை​முறைப்​படுத்த அனைத்​துக் கட்​சிகளும் ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

ஏப்​ரல் 16, 17, 18-ம் தேதி​களில் நடை​பெறவுள்ள நாடாளு​மன்ற சிறப்​புக்​ கூட்​டம் தொடர்​பாக அனைத்​துக் கட்​சித் தலை​வர்​களுக்​கும் பிரதமர் மோடி கடிதம் எழு​தி​யுள்​ளார். இந்த நிலையில், டெல்​லி விஞ்​ஞான் பவனில் நேற்று நடை​பெற்ற ‘நாரி சக்தி வந்​தன் சம்​மேளனம்’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி இதுகுறித்து மேலும் பேசி​ய​தாவது: நாடாளு​மன்​றத்தைக் கூட்டி மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக எடுத்த இந்த முடிவு பெண் சக்​தி​யைப் போற்​று​வதற்​காக எடுக்​கப்​பட்ட முடிவாகும். இது பெண் சக்​திக்​காக அர்ப்​பணிக்​கப்​பட்​டுள்ளது.

          

நமது நாடாளு​மன்​றம் ஒரு புதிய வரலாற்​றைப் படைக்க தயா​ராகி​விட்​டது. இது கடந்த கால கனவு​களை நனவாக்​கு​வதுடன், வருங்​காலத்​தின் தீர்​மானங்​களை​யும் நிறைவேற்​றும். சமூக நீதி என்​பது வெறும் முழக்​க​மாக இல்​லாமல், நமது பணிப் பண்​பாட்​டிலும், முடி​வெடுக்​கும் செயல்​முறை​யிலும் இயல்​பான அங்​க​மாக இருப்​பவை. சமத்​துவ இந்​தி​யா​வைப் படைப்​பதே எங்​களது நிலைப்​பாடு ஆகும்.

சட்​டப்​பேர​வை​கள் முதல் நாடாளு​மன்​றம் வரை பல தசாப்​தங்​களாகத் தொடரும் மகளிர் இடஒதுக்​கீட்​டுக்​கான காத்​திருப்பை முடிவுக்​குக் கொண்​டு வர வேண்​டிய சரி​யான தருணம் வந்​து​விட்​டது. நாட்​டின் வளர்ச்​சிப் பயணத்​தில் ஒரு முக்​கிய​மான மைல்​கல்​லாக, 21-ம் நூற்​றாண்​டின் மிக முக்​கிய​மான முடிவு​களில் ஒன்றை இந்​தியா எடுக்க தயா​ராகி​விட்​டது.

மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை நடை​முறைப்​படுத்த அரசு இரண்டு முக்​கி​யத் திருத்​தங்​களை செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது. கடந்த 2023-ம் ஆண்டு கொண்​டு​ வரப்​பட்ட ‘நாரி சக்தி வந்​தன் சட்​டம்’, மக்​கள் தொகை கணக்​கெடுப்பு மற்​றும் தொகுதி மறு​வரையறைக்​குப் பின்​னரே அமலுக்கு வரும் என்று கூறப்​பட்​டிருந்​தது. ஆனால், மக்​கள் தொகை கணக்​கெடுப்​புப் பணி​களில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால், 2011-ம் ஆண்​டின் கணக்​கெடுப்​புத் தரவு​களின் அடிப்​படை​யிலேயே இடஒதுக்​கீட்டை முன்​னெடுத்​துச் செல்ல மத்​திய அரசு தற்​போது திட்​ட​மிட்​டுள்​ளது.

இந்​தி​யப் பெண்​கள் குடியரசுத் தலை​வர் முதல் பிரதமர் பதவி வரை அலங்​கரித்​து, தங்​களுக்​கென தனித்​து​வமான பாரம்​பரி​யத்தை நிலை​நாட்​டி உள்​ளனர். இப்​போதும் குடியரசுத் தலை​வர், நிதி​ அமைச்​சர் போன்ற முக்​கியப் பொறுப்​பு​களைப் பெண்​கள் திறம்பட நிர்​வகித்து நாட்​டுக்​குப் பெருமை சேர்த்து வரு​கின்​றனர்.

2023-ல் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​ட ​போது அனைத்​துக் கட்​சிகளாலும் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது. 2029-ம் ஆண்​டுக்​குள் இதை அமல்​படுத்த வேண்​டும் என்​பது எதிர்க்​கட்​சிகளின் கோரிக்​கை​யாக​வும் இருந்​தது. பேச்​சு​வார்த்​தை, ஒத்​துழைப்பு மற்​றும் அனை​வரது பங்​களிப்​புடன் இம்​முறை இந்​தச் சட்​டத்தை நிறைவேற்​று​வதே எங்​களது முன்​னுரிமை. இவ்​வாறு பிரதமர் மோடி பேசினார்.

காங்​கிரஸ் கொறடா உத்​தரவு: இதற்கிடையே, மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடர்​பாக காங்​கிரஸ் கட்சி ஒரு சுற்​றறிக்கைவெளி​யிட்​டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மக்​களவையில் ஏப்​ரல் 16, 17, 18 (வி​யாழன், வெள்ளி, சனி) ஆகிய நாட்களில் மிக முக்​கிய​மான விவ​காரங்​கள், விவாதம் வாக்​கெடுப்​புக்​காக எடுத்துக் கொள்​ளப்பட உள்​ளன.

எனவே, காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த மக்​களவை உறுப்​பினர்​கள் அனை​வரும் இந்த மூன்று நாட்​களும் காலை 11 மணி முதல் அவை ஒத்​திவைக்​கப்​படும் வரை சபை​யில் தவறாமல் இருக்க வேண்​டும்.

அவை​யில் கட்​சி​யின் நிலைப்​பாட்​டுக்கு ஆதர​வாக செயல்பட வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. மத்​திய அரசு கொண்​டு வர உள்​ள முக்​கிய மசோ​தாக்​கள்​ மீதான வி​வாதத்​தின்​ போது கட்​சி​யின்​ பலத்​தை நிரூபிக்​க​வும்​, ஒரு​மித்​த நிலைப்​​பாட்​டை எடுக்​க​வும்​ இந்​த உத்​தர​வு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ள​தாகத்​ தெரிகிறது.

SCROLL FOR NEXT