இந்தியா

உ.பி.யின் வாராணசியில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்​பள​வில் கட்டத் திட்​டம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உ.பி. மாநிலம் வாராணசி​யில், 15 ஏக்​கர் பரப்​பள​வில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்​ப​தி​யின் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலை பல்​வேறு மாநிலங்​களில் நிறுவ திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறக்​கட்​டளை திட்​ட​மிட்​டுள்​ளது. அந்த வகை​யில், அசாமின் குவாஹாட்​டி, மகராஷ்டி​ரா​வின் பாந்த்​ரா, பிஹாரின் பாட்​னா, கர்​நாட​கா​வின் பெல​காவி உள்​ளிட்ட இடங்களில் கோயில் கட்ட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

திருப்​பதி கோயி​லின் அமைப்பு, வழி​பாட்டு முறை​களின்​படியே இக்​கோ​யில்​கள் உரு​வாக்​கப்​பட​வுள்​ளன. தங்​கும் வசதி, பிர​சாத விநி​யோகம் மற்​றும் 24 மணி நேர இலவச உணவு போன்ற வசதி​களும் இதில் இடம்​பெறவுள்​ளன. இதற்​காக அந்​தந்த மாநில அரசுகள் நிலம் வழங்​கும் நடை​முறை தொடங்​கி​யுள்​ள​தாக கடந்த 2026 ஜனவரி​யில் தகவல் வெளி​யானது.

அந்த வகை​யில், உ.பி.​யின் வாராணசி​யிலும் 15 ஏக்​கர் பரப்பளவில் ஸ்ரீவெங்​கடேஸ்வரர் கோயில் கட்​டப்பட உள்​ளது. இதன் பலனாக, திருப்​பதி பாலாஜியை தரிசிக்க காசி​வாசிகள் 1,800 கிலோமீட்​டர் தூரம் பயணிக்க வேண்​டிய​தில்லை எனக் கருதுகின்​றனர்.

இதற்​காக டோம்ரி மற்​றும் ராம்​நகர் பகு​தி​களின் கங்​கைக் கரை​யில் நிலம் தேடப்​பட்டு வரு​கிறது. அடுத்த வாரம், சாத்​தி​ய​மான இடங்​களைப் பார்​வை​யிட திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான குழு​வினர் வாராணசிக்கு வருகை தரவுள்​ளனர். அதன் பிறகு நிலம் தேர்வு செய்​யப்​படும்.

இத்​திட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள அதி​காரி​கள் கூறும்​போது, “இத்திட்டம் கோயில் கட்​டு​மானத்​துடன் மட்​டும் நின்​று​வி​டாது. இக்​கோ​யில் வளாகத்தை பக்​தர்​களுக்​கான ஒரு முக்​கிய ஆன்​மிக மற்றும் சேவை மைய​மாக உரு​வாக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. ஒரு மருத்​து​வ​மனை​யும் முன்​மொழியப்​பட்​டுள்​ளது.

மேலும், பக்​தர்​களின் வசதிக்​காக உணவு, பிர​சாதம், தங்​குமிடம் மற்​றும் பிற அத்​தி​யா​வசிய சேவை​களுக்​கான வசதி​களும் உருவாக்கப்படவுள்ளன” என்​றனர்.

SCROLL FOR NEXT