இந்தியா

விமானம் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவம்: நேராக நிற்க கூட முடியாத நிலையில் இருந்த விமானி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தாய்​லாந்​தின் புகெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடு​வானில் திடீரென 300 அடி கீழே இறங்​கிய சம்​பவத்​தில், முதன்மை விமானி கஞ்சா போதை​யில் இருந்​தது மருத்​து​வப் பரிசோதனை​யில் உறுதி செய்​யப்​பட்​டுள்​ள நிலையில், விசாரணையின்போது அவரால் நேராக நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்த அதிர்ச்சி தகவல்​கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி 137 பயணி​கள் மற்​றும் 8 விமானப் பணியாளர்​களு​டன் தாய்​லாந்​தின் புக்​கெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி ‘ஏஐ-2379’ எண் கொண்ட ஏர் இந்​தியா விமானம் வந்து கொண்​டிருந்​தது. அப்​போது நடு​வானில் திடீரென 300 அடி உயரத்​துக்கு விமானம் சட்​டென்று கீழே இறங்​கியது. இதில், நிலை தடு​மாறிய​தில் 20 பயணி​களும் 4 விமானப் பணி​யாளர்​களும் காயமடைந்​தனர்.

இதுகுறித்து விமான விபத்து புல​னாய்வு அமைப்பு (ஏஏஐபி) விசாரணை​ நடத்தி வருகிறது. விமானிக்கு நடத்தப்பட்ட இரண்டுகட்ட மருத்​து​வப் பரிசோதனை​களி​லும் விமானியின் உடலில் கஞ்சா பயன்​படுத்​தி​யதற்​கான சான்​றுகள் உறுதியாகியுள்​ளன. விமானம் ஆபத்து எச்​சரிக்கை ஒலித்​த​போது, முதன்மை விமான ஓட்டி காக்​பிட் தரை​யில் உட்​கார்ந்த நிலை​யில் இருந்​துள்​ளார்.

விபத்​துக்​குப் பிறகு பயணி​கள் காயமடைந்​தது குறித்​துப் பார்க்க வந்தபோது், ஒரு காலில் ஷூ மற்​றும் சாக்ஸ் எது​வுமின்றி வந்துள்ளார். தன்​னை்யாரும் வீடியோ எடுக்​கக் கூடாது என்​றும் கூறியுள்​ளார். டெல்லி விமான நிலை​யத்​தில் தரை​யிறங்​கியதும், அந்த பைலட்​டால் நேராக நிற்​கக்​கூட முடிய​வில்​லை.

சோதனைக்​காக சிறுநீர் மாதிரி அளிக்​கும்​போதுகூட புல​னாய்வு அதி​காரி​யின் உதவி​யுடனேயே அவர் அழைத்​துச் செல்லப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புகெட்​டில் தங்​கி​யிருந்த 24 மணி நேரத்​திற்​குள் விருந்துக்குச் சென்​றுள்​ளார். அங்கு அவர் கஞ்சா புகை்த்​த​தாக சக ஊழியர் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT