இந்தியா

சாதகமான சலுகை வழங்கினால் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இறுதியாகும்: பியூஷ் கோயல் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​போட்டி நாடு​களை விட இந்​தி​யா​வுக்​குச் சாதக​மான சலுகைகளை அமெரிக்கா வழங்​கும்பட்​சத்​தில் வர்த்தக ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​படும் என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் நேற்று தெரி​வித்​தார்.

மத்​திய வர்த்தக அமைச்​சகம் சார்​பில் டெல்லியில் நடத்​தப்பட்ட தேசி​யப் பயிலரங்​கில் அவர் பேசி​ய​தாவது: சுமார் 60 டிரில்​லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யைக் கொண்ட பொருளா​தா​ரங்​களை உள்​ளடக்​கிய 9 தாராள வர்த்தக ஒப்​பந்​தங்​களை இந்​தியா ஏற்​கெனவே மேற்​கொண்​டுள்​ளது. இதன் மூலம் உலகளா​விய வர்த்​தகத்​தில் சுமார் மூன்​றில் இரண்டு பங்கு சந்​தைகளை இந்​தி​யா​வால் அணுக முடி​யும்.

அடுத்து வரும் மாதங்​கள் மற்​றும் சில ஆண்​டு​களில் கனடா, மெக்​சிகோ, சிலி, மெர்​கோசுர், தென்​னாப்​பிரிக்க சுங்க யூனியன், வளை​குடா ஒத்​துழைப்பு கவுன்​சில் மற்​றும் இஸ்​ரேல் ஆகிய நாடு​களு​டன் வர்த்தக ஒப்​பந்​தங்​கள் இறுதி செய்​யப்​பட​வுள்​ளன. மேலும், ஆசி​யான், கொரியா மற்​றும் ஜப்​பான் உடனான வர்த்தக ஒப்​பந்​தங்​களும் மறுஆய்வு செய்​யப்​பட​வுள்​ளன. இதன் மூலம் உலக வர்த்​தகத்​தில் 75% பங்கை போட்டி நாடு​களை விடக் குறைந்த வரிக் கட்​ட​ணத்​தில் இந்​தியா பெற முடி​யும்.

பிரிட்​டன், மொரீஷியஸ், ஓமன், ஐக்​கிய அரபு அமீரகம் மற்​றும் ஆஸ்​திரேலியா ஆகிய நாடு​களு​ட​னான வர்த்தக ஒப்​பந்​தங்​களை இந்​தியா ஏற்​கெனவே அமல்​படுத்​தி​யுள்​ளது. நியூசிலாந்து உடனுட​னான ஒப்​பந்​தம் விரை​வில் செயல்​பாட்​டுக்கு வரவுள்​ளது. அதைத் தொடர்ந்​து, 27 நாடு​களைக் கொண்ட ஐரோப்​பிய யூனியனுட​னான ஒப்​பந்​த​மும் அமலாகும். போட்டி நாடு​களை விட இந்​தி​யா​வுக்​குக் குறைந்​த​பட்ச சலுகைக் கட்​ட​ணத்தை அமெரிக்கா வழங்​கும் பட்​சத்​தில், இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​படும்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT