திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே 2 முறை வெற்றி பெற்ற தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது மார்க்சிஸ்ட் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கேரளாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த வழக்கத்தை இடது ஜனநாயக முன்னணி கடந்த முறை தகர்த்தெறிந்து தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் கோவிந்தன் நேற்று 81 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.