இந்தியா

நாடாளுமன்றத்துக்குள் செல்ல பிராணிகளுக்கு அனுமதி இல்லை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்​கிரஸ் எம்​.பி.ரேணுகா சவுத்ரி கடந்த மாதம் ஒரு நாயுடன் நாடாளு​மன்ற குளிர்​காலக் கூட்​டத் தொடருக்கு வந்ததால் சர்ச்சை ஏற்​பட்டது.

இந்நிலை​யில், மத்​திய தொழிலக பாது​காப்பு படை​யின் (சிஐஎஸ்எப்) தலைமை இயக்​குநர் பிர​வீர் ரஞ்​சன் நேற்று செய்தியாளர்​களிடம் கூறுகை​யில், “செல்​லப் பிராணி​களுக்கு நாடாளு​மன்ற வளாகத்​திற்​குள் அனு​மதி இல்லை என்​ப​தில் எந்த சந்​தேக​மும் இல்​லை.

எம்​.பி.க்​கள் வாக​னங்​கள் சோதனை​யிடப்​படு​வ​தில்​லை. செல்ல பிராணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்த முயற்​சித்​து வருகிறோம்​” என்​றார்​.

SCROLL FOR NEXT