புதுடெல்லி: அஜய் கோயல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு கூறியதாவது:
வாக்களிக்க வாக்காளர்கள் செல்லவில்லை என்றால் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்? வாக்களிக்க மறுப்பவர்களை கைது செய்ய உத்தரவிட முடியுமா? சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும்.
இது விழிப்புணர்வு சார்ந்த விவகாரம் என்பதால் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வாக்களிக்க கட்டாயப்படுத்த முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.