புதுடெல்லி: மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று முன்தினம் சமர்ப்பித்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கடந்த 2025-ல் சாலை விபத்துகளில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதாவது நாளொன்றுக்கு 502 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்புகளில் உ.பி.யில் மிக அதிக உயர்வு பதிவாகியுள்ளது. அங்கு 2024-ல் 24,118 ஆக இருந்து உயிரிழப்பு, கடந்த ஆண்டில் 27,550 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் பஞ்சாபில் சாலை விபத்து மரணம் கணிசமாக குறைந்துள்ளது.
அங்கு 2024-ல் 4,759 ஆக இருந்த உயிரிழப்பு கடந்த ஆண் டில் 3,062 ஆக குறைந்துள்ளது. 2025-ல் விபத்துகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 5.3% அதிகரித்து 5.1 லட்சத்துக்கு மேல்பதிவாகியுள்ளது. மேலும் உயிரிழப்பு 3.5% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.