இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் 20-ம் தேதி தொடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​நாடாளு​மன்​றத்​தின் மழைக்​கால கூட்​டத் தொடர் அறி​விப்பை நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று வெளி​யிட்​டார்.

அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய அரசின் பரிந்​துரைப்​படி, நாடா​ளுமன்​றத்​தின் மழைக்​கால கூட்​டத் தொடரை கூட்ட குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு உத்​தர​விட்​டுள்​ளார். அதன்​படி இந்​த கூட்​டம் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆக.13-ம் தேதி வரை நடை​பெறும். இந்த கூட்​டத் தொடரில் தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த விஷ​யங்​கள் குறித்து ஆக்​கப்​பூர்​வ​மான விவாதம் நடை​பெறும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

மக்​கள்தொகை அடிப்​படை​யில் தொகு​தி​களை மறு​வரையறை செய்​தால், மக்​கள் தொகை கட்​டுப்​படுத்​தப்​பட்ட தென் மாநிலங்​களில் தொகு​தி​களின் எண்​ணிக்கை குறை​யும் என தென் மாநில அரசி​யல் கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. அதனால், அனைத்து மாநிலங்​களிலும் சீராக 50 சதவீத இடங்​களை அதி​கரிக்​கும் வகை​யில் தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மத்திய அரசு மாற்​றி அமைத்து வரு​கிறது. இந்​நிலை​யில் மழைக்​கால கூட்​டத் தொடர் தொடங்​க​ உள்​ளது. இந்த 25 நாள் கூட்​டத் தொடரில் 19 அமர்​வு​கள் நடை​பெறும்.

20 திரிண​மூல் எம்​.பி.க்​களும், 6 சிவசேனா உத்​தவ் அணி எம்​.பி.க்​களும் தங்​களை தனி அணி​யாக அறிவிக்க கோரி மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​விடம் மனு அளித்​துள்​ளனர். இந்த விவ​காரத்​தில் சபா​நாயகர் ஓம் பிர்லா இன்​னும் முடிவு எடுக்​கவில்​லை. இந்த விவகாரம் மழைக்​கால கூட்​டத் தொடரில் எதிரொலிக்​கும் என்று தெரி​கிறது.

SCROLL FOR NEXT