இந்தியா

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மரியாதை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நா​டாளு​மன்றத்தின் மீது நடந்த தீவிரவாத தாக்​குதலின் 24-வது நினைவு தினத்தை முன்​னிட்டு உயிரிழந்த வீரர்களுக்கு குடியரசு துணைத் தலை​வர், பிரதமர் மோடி உள்​ளிட்ட தலை​வர்​கள் மரியாதை செலுத்​தினர்.

கடந்த 2001-ம் டிசம்​பர் 13-ம் தேதி நாடாளு​மன்ற வளாகத்​தில் தீவிர​வா​தி​கள் நடத்திய தாக்​குதலில் சிஆர்​பிஎப், டெல்லி போலீ​ஸார் உள்​ளிட்ட 9 பேர் வீரமரணம் அடைந்​தனர். தீவிர​வா​தி​கள் 5 பேரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்​லப்​பட்​டனர்.

இந்த தாக்​குதலின் 24-வது ஆண்டு நினைவு தினத்தை முன்​னிட்​டு, தாக்​குதலில் உயிர்​நீத்த தியாகி​களின் படங்​கள் நாடாளு​மன்ற வளாகத்​தில் நேற்று அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்​தன.

இங்கு சிஐஎஸ்​எப் வீரர்​கள் வீர​வணக்க மரி​யாதை செலுத்​தி​யதைத் தொடர்ந்து 1 நிமிடம் மவுன அஞ்​சலி செலுத்​தப்​பட்​டது. இதில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய அமைச்​சர்​கள் கிரிண் ரிஜிஜு, ஜிதேந்​திர சிங், அர்​ஜுன் ராம் மேக்​வால், காங்​கிரஸ் தலை​வர்​கள் சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, பிரி​யங்கா காந்தி உள்​ளிட்ட பலர் பங்​கேற்​று, தியாகிகளுக்கு மலரஞ்​சலி செலுத்​தினர்.

இதற்​கிடை​யில், நாடாளு​மன்ற தாக்​குதலில் உயிர்​நீத்த தியாகி​களுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு அஞ்​சலி செலுத்​தி​னார். அவர்​களுக்​கும் அவர்​களது குடும்​பத்​தினருக்​கும் நாடு என்​றென்​றும் கடன்​பட்​டிருக்​கும் என்று அவர் கூறி​னார்.

பிரதமர் நரேந்​திர மோடி பின்​னர் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “நாடாளு​மன்​ற தாக்​குதலில் தங்​கள் இன்​னு​யிரை ஈந்​தவர்​களை நமது தேசம் நினை​வு​கூர்​கிறது. அவர்​களின் இந்த உன்னத தியாகத்​துக்​காக இந்​தியா என்​றென்​றும் நன்​றி​யுடன் இருக்​கும்’’ என்று கூறி​யுள்​ளார்.

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “இந்த மாவீரர்​களின் தி​யாகத்​துக்​கும் வீரமரணத்​துக்​கும் இந்த தேசம் என்​றென்​றும்​ கடன்​பட்​டிருக்​கும்​’’ என்​று கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT