இந்தியா

இந்திய கடற்படை கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதல்

தூதரக அதிகாரியை அழைத்து மத்திய அரசு கண்டனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வடக்கு அரபிக் கடலில் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த இந்​தி​யக் கடற்​படை​யின் போர்க் கப்​பல் மீது பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் மோதி​யது தொடர்​பாக, அந்​நாட்டு தூதரகத்​தின் பொறுப்பு அதி​காரியை நேரில் அழைத்து இந்​தியா கண்​டனம் தெரி​வித்​தது.

வடக்கு அரபிக் கடலில் நேற்று முன்​தினம் வழக்​க​மான கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த இந்​தி​யக் கடற்​படை​யின் போர்க் கப்​பலை நோக்கி பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பல் ஒன்று அதிக வேகத்​தில் மோதி​யது. இந்த சம்​பவத்​தில் பெரிய அளவில் சேதம் ஏற்​பட​வில்லை என்று மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் தெரி​வித்​தது.

எனினும், இந்த சம்​பவத்​துக்கு இந்​தியா கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக, இந்​தி​யா​வுக்​கான பாகிஸ்​தான் தூதரக பொறுப்பு அதி​காரியை(சாத் வார்​ரைச்), வெளி​யுறவுத்​துறை அமைச்​சகத்​துக்கு நேரில் வரவழைத்து கண்​டனம் தெரிவிக்​கப்​பட்​டது. அப்​போது,“கடலில் பாகிஸ்​தான் கடற்​படைப் பிரிவு​கள் மேற்​கொண்ட ஏற்​றுக்​கொள்ள முடி​யாத மற்​றும் தொழில்​முறையற்ற நடவடிக்கை காரண​மாக, இந்​தி​யக் கடற்​படைப் பிரிவுடன் மோதல் ஏற்​பட்​டது” என்று அவரிடம், இந்​தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்​த​தாக வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

எனினும், பாகிஸ்​தான் கடற்​படைக் கப்​பலின் நடவடிக்​கை, 1991-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் இந்​தி​யா-​பாகிஸ்​தான் இடையே மேற்​கொள்​ளப்​பட்ட ராணுவ நடவடிக்​கைகள் மற்​றும் படை நகர்​வு​கள் குறித்த முன்​கூட்​டிய தகவல் அளிக்​கும் ஒப்​பந்​தத்​தின் 10-வது பிரிவுக்கு முரணானது என்று வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் தெரி​வித்​தது.

இது​போன்ற சம்​பவங்​கள் மீண்​டும் நடை​பெறாமல் தடுக்​கும் வகை​யில், இரு நாட்டு ஒப்​பந்​த விதி​களை மதித்​து, உரிய கவனத்​துடன் அனைத்து ராணுவப் பிரிவு​களும் செயல்பட வேண்​டியதன் அவசி​யத்தை பாகிஸ்​தான் அதி​காரி​களிடம் தெரிவிக்​கு​மாறு அந்​நாட்டு பொறுப்பு அதி​காரி​யிடம் இந்​தியா அறி​வுறுத்​தி​யது.

SCROLL FOR NEXT