இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கில் டிசம்பர் 16-ம் தேதி உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டபோது அதை நடத்திய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 90 கோடி கடன் இருந்தது.

2010-ம் ஆண்டு சோனியா, ராகுல் காந்தி பங்குதாரர்களாக கொண்ட யங் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கி அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் கடனை அடைத்து அதன் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க முயன்றனர் என்பதுதான் புகார்.

இந்த நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கு டெல்லியிலுளள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில், குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றப்பத்திரிகை தாக்கலானதைக் கருத்தில் கொண்டு, வழக்கு தொடர்பான உத்தரவை வரும் டிசம்பர் 16-ம் தேதி பிறப்பிக்கப் போவதாக நீதிபதி விஷால் கோக்னே அறிவித்தார்.

SCROLL FOR NEXT