இந்தியா

தலைமை தேர்தல் ஆணையரை நீக்க எதிர்க்கட்சிகள் மீண்டும் முயற்சி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹார் மற்​றும் மேற்​கு​வங்​கத்​தில் நடை​பெற்ற வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​யில் (எஸ்​ஐஆர்) தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் ஆளும் பாஜக கட்​சிக்கு சாதக​மாக செயல்​படுவதாக எதிர்க்கட்சிகள் குற்​றம் சாட்​டின. அவரை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும் என்று எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் 193 பேர் ஆதர​வுடன் நாடாளு​மன்​றத்​தில் நோட்​டீஸ் கொடுக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்​நிலை​யில் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஸ்குமாரை பதவி நீக்க வேண்​டும் என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 73 எம்​.பி.க்​கள் கையெழுத்திட்டு மாநிலங்​களவை​யில் மீண்​டும் நோட்டீஸ் கொடுத்​துள்​ளனர். இதுகுறித்து திரிண​மூல் எம்.பி. டெரக் ஓ பிரேன் கூறுகை​யில், ‘‘தலைமை தேர்​தல் ஆணை​யருக்கு எதி​ராக கூடு​தல் குற்​றச்​சாட்​டு​களு​டன் எதிர்க்​கட்​சிகள் புதிய பதவி நீக்க தீர்​மானம் நோட்​டீஸ் வழங்​கும்’’ என்​றார்.

அரசி​யல் ​சாசனத்​தின் 324 (5)-வது விதி​முறை​யின் கீழ் உச்ச நீதி​மன்ற நீதிப​தியை பதவி நீக்​கம் செய்ய பின்​பற்​றப்​படும் நடை​முறை, தலைமை தேர்​தல் ஆணை​யரை நீக்கவும் பின்​பற்​றப்​படும். இந்த நோட்​டீஸ் அனு​ம​திக்​கப்​பட்​டால், மூத்த நீதிப​தி​கள் அடங்​கிய குழு அமைக்​கப்​பட்டு விசா​ரணை மேற்​கொள்​ளப்​படும். அதில் தலைமை தேர்​தல் ஆணை​யர் தனது தரப்பு நடவடிக்​கைகளை நியாயப்​படுத்​த வாய்ப்​பு அளிக்​கப்​படும்​.

SCROLL FOR NEXT