இந்தியா

பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள நிலையில் கேரளாவில் 42 பெண்கள் மட்டுமே தேர்தலில் போட்டி

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளா​வில் ஆண்​களை விட பெண் வாக்​காளர்​கள் அதி​க​மாக இருந்த போதி​லும், தேர்​தல் களத்​தில் 42 பெண்​கள் மட்​டுமே உள்​ளனர்.

இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் சமீபத்​திய தரவு​களின்​படி, கேரளா​வில் பெண் வாக்​காளர்​களின் எண்​ணிக்கை (1,39,21,868) ஆண்​களை விட (1,32,20,811) அதி​கம். ஆனால் இந்த முறை 42 பெண்​கள் மட்​டுமே முக்​கிய கட்​சிகளின் சார்​பில் வேட்​பாளர்​களாகக் களமிறக்​கப்​பட்​டுள்​ளனர்.

          

பாஜக சார்​பில் 14, சிபிஐ(எம்) சார்​பில் 12, காங்​கிரஸ் சார்​பில் 9, சிபிஐ சார்​பில் 5, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் சார்​பில் (முதல் முறை​யாக) 2 பெண்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.

இதுகுறித்து காங்​கிரஸ் எம்​எல்ஏ பி.சி.​விஷ்ணு​நாத் கூறும்​போது, ‘‘பெண்​களுக்கு அதிக இடம் கொடுக்​கத் தலைமை முயற்சி செய்​தா​லும், வெற்றி வாய்ப்பு உள்​ளிட்ட காரணங்​களால் கட்​டமைப்பு ரீதி​யான தடைகள் உள்​ளன’’ என்​றார். சிபிஐ (எம்) மூத்த தலை​வரும் அனைத்து இந்​திய மாதர் சங்க நிர்​வாகி​யு​மான பி.கே. ஸ்ரீமதி கூறும்​போது, ‘‘இடது​சாரி முன்​னணி பெண்​களுக்கு மொத்​தம் 18 இடங்​களை வழங்​கி​யுள்​ளது. இது எவ்​வகை​யிலும் போது​மானது அல்ல. தேர்​தலில் பெண்​களுக்​குக் குறை​வான இடங்​களே ஒதுக்​கப்​படு​வது வருத்​தமளிக்​கிறது’’ என்​றார்.

கேரளா​வில் 1957-ல் சட்​டப்​பேரவை உரு​வானது முதல் இன்று வரை, பெண் உறுப்​பினர்​களின் எண்​ணிக்கை 10 சதவீதத்​தைத் தாண்​ட​வில்​லை. மத்​திய அரசு கொண்டு வந்த ‘நாரி சக்தி வந்​தன் அதினி​யம்' (பெண்​கள் இடஒதுக்​கீடு சட்​டம்) கடந்த செப்​டம்​பர் மாதம் குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலைப் பெற்​றது. இது பெண் தலை​வர்​களிடையே பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யது. எனினும், தொகுதி மறு​வரையறை பணி​கள் முடிவடை​யாத​தால் இந்​தச் சட்​டம் இத்​தேர்​தலில் நடை​முறைக்​கு வரவில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT