இந்தியா

ஒரு கி.மீ.க்கு 1 பைசா - ரயில் கட்டணத்தை உயர்த்தியது ரயில்வே!

வெற்றி மயிலோன்

புது டெல்லி: ரயில்களில் 215 கி.மீ.க்கு மேற்பட்ட பயணங்களுக்கு சாதாரண வகுப்புக்கு ஒரு கி.மீ.க்கு 1 பைசாவும், மற்ற வகுப்புகளுக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசாவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில்களில் 215 கி.மீ.க்கு மேற்பட்ட பயணங்களுக்கு சாதாரண வகுப்பிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏசி அல்லாத வகுப்புகளுக்கும் மற்றும் அனைத்து ரயில்களின் ஏசி வகுப்புகளுக்கும் ஒரு கி.மீ.க்கு 2 பைசாவும் ரயில் கட்டணத்தை உயர்த்தி ரயில்வே அமைச்சகம் இன்று (டிசம்பர் 21) அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு டிசம்பர் 26 முதல் அமலுக்கு வரும்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "புறநகர் ரயில்களின் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கும், மற்ற ரயில்களின் சாதாரண வகுப்பில் 215 கி.மீ. வரையிலான பயணத்திற்கும் கட்டண உயர்வு இல்லை. இந்த கட்டண உயர்வு மூலம் 2026ஆம் ஆண்டு மார்ச் 31 வரை ரயில்வேக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் தகவல்களின்படி, ஜூலை 2025-ல் செய்யப்பட்ட முந்தைய கட்டண உயர்வு மூலம் இன்றுவரை ரூ.700 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT