இந்தியா

ஒடிசா: லஞ்சம் வாங்கிய சிபிஐ அதிகாரி மீது வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒடிசாவில் லஞ்சம் வாங்கிய சிபிஐ அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒடி​சா​வின் சுந்​தர்​கரில் மகாநதி நிலக்​கரி சுரங்க லிமிடெட் நிறு​வனத்​தில் சிபிஐ தரப்​பில் அசிஸ்​டென்ட் சப்​-இன்​ஸ்​பெக்​ட​ராக எஸ்​.பி. சேத்தி பணி​யாற்றி வந்​தார்.

          

சட்​ட​விரோத​மாக நிலக்​கரியை எடுத்​துச் செல்ல அவர் லட்​சக்​கணக்​கில் லஞ்​சம் பெற்​ற​தாக புகார்​கள் எழுந்​தன.

இதுகுறித்து சிபிஐ உயர​தி​காரி​கள் விசா​ரணை நடத்​திலஞ்சம் வாங்கியதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் மீது சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்​தது.

மேலும் லஞ்ச வழக்​கில் தொடர்​புடைய சிபிஐ அசிஸ்​டென்ட் சப்​-இன்​ஸ்​பெக்​டர் பிரசந்த குமார் மீதும் விசாரணை நடத்​தப்​பட்​டு வரு​கிறது.

SCROLL FOR NEXT