இந்தியா

2029 மக்களவைத் தேர்தலில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 46% அதிகரிக்கும்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்​தலில் வாக்குச் சாவடிகளின் எண்​ணிக்கை 46 சதவீதம் அதி​கரிக்​கும் என்று தலை​மைத் தேர்தல் ஆணையம் தெரி​வித்​துள்​ளது.

தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் கீழ் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்​தல் தொடர்​பான தகவல்​கள் கோரப்​பட்​டன. இதற்கு தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் அளித்​துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2024-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்தலின்​போது நாடு முழு​வதும் 10.52 லட்​சம் வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்​டன. வரும் 2029-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலின்​போது 15.38 லட்​சம் வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​படும்.

இதன்​படி கடந்த தேர்​தலை​விட 2029-ம் ஆண்டு தேர்​தலில் வாக்குச்சாவடிகளின் எண்​ணிக்கை 46 சதவீத​ம் அதி​கரிக்​கும். கடந்த 2019-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலின்​போது தேர்​தல் ஆணை​யத்​திடம் 14.88 லட்​சம் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்திரங்களும் 11.30 லட்​சம் கட்​டுப்​பாட்டு பிரிவு சாதனங்​களும் இருந்​தன. தற்​போது 30.48 லட்​சம் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்திரங்​களும், 21.92 லட்​சம் கட்​டுப்​பாட்டு பிரிவு சாதனங்​களும் உள்​ளன.

ஒவ்​வொரு தேர்​தலின்​போதும் பழைய மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் நீக்​கப்​பட்டு புதிய இயந்​திரங்​கள் வாங்​கப்​படு​வது வழக்​கம். இதன்​படி 3.57 லட்​சம் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்திரங்​களும் 1.25 லட்​சம் கட்​டுப்​பாட்டு பிரிவு சாதனங்​களும் நீக்​கப்பட உள்​ளன. இதற்​குப் பதிலாக, வரும் 2029-ம் ஆண்டு தேர்தல் பணிக்​காக ரூ.486 கோடி​யில் புதிய மின்​னணு வாக்குப்பதிவு இயந்​திரங்​கள், வி​வி​பாட் சாதனங்​கள் வாங்கப்படும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT