கோப்புப்படம்

 
இந்தியா

நக்சல் இல்லாத மாவட்டமாக ஒடிசாவின் நவரங்பூர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடி​சா​வின் நவரங்​பூர், சத்​தீஸ்​கரின் தம்​தாரி மாவட்​டங்​களில் செயல்​பட்​டு ​வந்த 7 பெண்​கள் உள்​ளிட்ட 9 நக்​சலைட்​கள் சத்​தீஸ்​கரில் சரண் அடைந்​துள்​ளனர். இதையடுத்து நவரங்​பூர் நக்​சல் இல்​லாத மாவட்​ட​மாக மாறி​யுள்​ள​தாக போலீ​ஸார் அறி​வித்​துள்​ளனர். இதுகுறித்து போலீஸ் அதி​காரி​கள் கூறிய​தாவது:

நவரங்​பூர் மாவட்​டத்​தில் 2011 செப்​டம்​பர் 24-ம் தேதி பிஜு ஜனதா தள எம்​எல்ஏ ஜகபந்து மாஜி, பாது​காப்பு அதி​காரி பி.கே.பட்ரோ கொல்​லப்​பட்​டடனர். அதன்பிறகு இந்த ​மாவட்​டத்​தில் பெரிய பிரச்​சினை​ ஏற்​பட​வில்​லை.

          

ஒடி​சா​வின் 30 மாவட்​டங்​களில், இப்​போது கந்​த​மால், கலஹண்​டி, போலாங்​கிர், மல்​காங்​கிரி, கோராபுட், ராயக​டா, பவுத் ஆகிய 7 மாவட்​டங்​களின் சில பகு​தி​களில் மட்​டுமே நக்​சல் நடமாட்​டம் உள்​ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT