அமராவதி: குடியரசு துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் திங்கட்கிழமை ஆந்திர மாநிலத்துக்கு பயணம் செய்கிறார்.
இந்தப் பயணத்தின்போது, ஏலூர் மாவட்டம் முசுனூரில் உள்ள கோர்மெட் பாப்கார்னிகா தொழிற்சாலையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். அங்கு அவர் நாட்டின் முதல் மரபணு மாற்றப்படாத, அதிக வளர்ச்சி திறன் கொண்ட பாப்கார்ன் மக்காச்சோள கலப்பின விதையை அறிமுகம் செய்வார். இந்த நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை கவுரவிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.