உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சம்பள உயர்வு கேட்டு நேற்று தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார். படம்: பிடிஐ

 
இந்தியா

நொய்டாவில் தொழிலாளர் போராட்டத்தில் வன்முறை

வாகனங்களுக்கு தீவைப்பு, முக்கிய சாலைகளில் போக்குவரத்து முடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்​தரபிரதேச மாநிலம் நொய்​டா​வில் தொழிலா​ளர் நடத்தி வந்த போராட்​டத்​தில் நேற்று வன்​முறை வெடித்​தது. இதில் பல வாக​னங்​களுக்கு தீ வைக்​கப்​பட்​டது. முக்​கிய சாலைகளில் வாக​னப் போக்​கு​வரத்து முடங்​கியது.

உத்​தரபிரதேச மாநிலம் நொய்​டா​வில் பல்​வேறு தொழிற்​சாலைகளில் பணி​யாற்​றும் தொழிலா​ளர்​கள் கடந்த சில நாட்​களாக சம்பள உயர்வு கேட்டு போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர். நொய்​டா​வில் பேஸ் 2, செக்​டார் 60, செக்​டார் 62, செக்​டார் 84 உள்​ளிட்ட பகு​தி​களில் இந்​தப் போராட்​டம் நடை​பெற்று வந்​தது.

          

நேற்​றும் தங்​கள் போராட்​டத்தை தொடர்ந்த தொழிலா​ளர்​கள் சம்பள உயர்வு உள்​ளிட்ட கோரிக்கைகளை வலி​யுறுத்தி முழக்​கம் எழுப்​பினர். இந்​நிலை​யில் போராட்​டக்​கார்​களில் ஒரு பிரி​வினர் திடீரென வன்​முறை​யில் ஈடு​பட்​டனர். இந்த வன்​முறை மற்ற இடங்​களுக்​கும் பரவியது. இதில் 57 செக்​டாரில் சுமார் 50 நிறு​வனங்​கள் மற்​றும் 200 வாக​னங்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. ஒரு நிறு​வனத்​துக்கு தீவைக்​கும் முயற்​சி​யிலும் போராட்​டக்​காரர்​கள் ஈடு​பட்​டனர்.

இது​போல் 58-வது மற்​றும் 59—வது செக்​டார் பகு​தி​களி​லும் தொழிற்​சாலைக்​குள் புகுந்து சேதப்​படுத்​துதல், கற்​களை வீசுதல் வாக​னங்​களை சேதப்​படுத்​துதல் மற்​றும் தீ வைத்​தல் என வன்​முறை​யில் ஈடு​பட்​டனர். செக்​டார் 62-ஐ செக்​டார் 16 மற்​றும் என்​எச் 9 உடன் இணைக்​கும் முக்​கியச் சாலைகளில் தொழிலா​ளர்​கள் மறியலில் ஈடு​பட்​டனர். இதனால் நொய்​டா​வின் பல பகு​தி​களில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. நீண்ட தொலை​வுக்கு வாக​னங்​கள் அணிவகுத்து நின்​றன. அலு​வல​கம் செல்​வோர் மிகுந்த அவதிக்​குள்​ளாகினர்.

இதற்​கிடை​யில் வன்​முறை பரவிய இடங்​களில் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர். போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும் கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசி​யும் நிலை​மையை கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர்.

100 பேர் கைது: தொழிலா​ளர் போராட்​டத்​தில் வன்​முறையை தூண்​டிய​வர்​களை காவல்​துறை அடை​யாளம் கண்டு வரு​வ​தாக​வும், அவர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​றும் உத்​தரப்​பிரதேச காவல்​துறை தலைமை இயக்​குநர் ராஜீவ் கிருஷ்ணா எச்​சரித்​தார். இந்​நிலை​யில் வன்​முறை தொடர்​பாக சுமார் 100 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

கவுதம புத்த நகர் மாவட்​டத்​தில் தொழிலா​ளர்​களின் உரிமை​களைப் பாது​காக்​க​வும், தொழில்​துறைத் துறை​யில் வெளிப்​படைத் தன்​மையை மேம்​படுத்​த​வும், மாவட்ட ஆட்​சி​யர் மேதா ரூபம் புதிய வழி​காட்​டு​தல்​களை வெளி​யிட்​டுள்​ளார். ஊழியர்​களின் ஊதி​யம், கூடு​தல்​நேர பணிக்​கான ஊதி​யம், போனஸ் மற்​றும் குறை தீர்க்​கும் வழி​முறை​களைச் சீரமைப்​பதே இந்த வழி​காட்​டு​தல்​களின் நோக்​கம் என்று அவர் கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT